ஒமைக்ரான் வைரஸ்! புதிய தகவலை வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு!

Photo of author

By Sakthi

ஒமைக்ரான் என்ற புதிய வகை நோய் தொற்று உலக நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகின்றது. முதன் முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் மற்ற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது .இந்த வைரஸ் பரவல் தொடர்பாக பல நாடுகளும் அச்சத்திலேயே இருந்து வருகின்றன.

இந்த சூழ்நிலையில், உலக சுகாதார அமைப்பு கடுமையான நோய் உண்டாகாது என்று தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் அவசரகால இயக்குனர் மைக்கல் ரியான் தெரிவிக்கும்போது, முந்தைய நோய்த்தொற்று வகைகளைவிட இந்த புதிய வகை நோய் தொற்று கடுமையான பாதிப்பை உண்டாக்காது என்பதற்கான எந்தவிதமான அறிகுறியும் நம்மிடம் இல்லை. நம்மிடம் மிகவும் பயனுள்ள தடுப்பூசிகள் இருக்கின்றன, அவை தற்போது இருக்கின்ற அனைத்து வகைகளுக்கும் எதிராக செயல்பட்டு நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்துகிறது. இந்த புதிய வகை வைரஸ் தொடர்பாக மேலும் ஆராய்ச்சி தேவை என்று கூறியிருக்கிறார்.