உங்க சீட்டு இங்கே செல்லாது! இந்திய ராணுவம் உறுதி!

0
201

17 வயதான இளைஞர்கள் 4

ஆண்டுகள்ஒப்பந்தத்தினடிப்படையில் சொந்த விருப்பத்தின் பேரில் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வழிவகை செய்யும் சட்ட மசோதா மத்திய அரசின் சார்பாக சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் திட்டத்திற்கு அக்னிபாத் திட்டம் என்று பெயரிடப்பட்டது, இந்த திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. பஞ்சாப், உத்திரப்பிரதேசம், பீகார், தெலுங்கானா, உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்வண்டிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

ரயில் நிலையங்களில் புகுந்த போராட்டக்காரர்கள் தொடர்வண்டி நிலையங்களை அடித்து நொறுக்க தொடங்கினர் இந்த எதிர்ப்பு இந்தியா முழுவதும் மிகப்பெரிய புயலை கிளப்பி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், அக்னிபாத் திட்டத்தில் இணையும் இளைஞர்களுக்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த விதத்தில் அக்னிபத் திட்டத்தின்கீழ் ஆள்சேர்ப்பு தொடர்பாக முப்படைகளும் நேற்று அட்டவணை ஒன்றை வெளியிட்டிருக்கின்றன.

அதன் பிறகு இந்தத் திட்டம் தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது உரையாற்றிய ராணுவ விவகாரத்துறை கூடுதல் செயலாளர் அனில் பூரி முப்படைகளில் சேவை செய்பவர்களுக்கான வயது குறைக்கப்படுவது குறித்து ஆலோசனை வெகு நாட்களாக இருந்து வருகிறது. கார்கில் மறுஆய்வு குழுவும் இது தொடர்பாக தங்களுடைய ஆலோசனைகளை வழங்கிய வருகின்றன.

அரசு இந்தத் திட்டத்தை செயல்படுத்தப் போகிறது. அதன் காரணமாக. இளைஞர்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அக்னிபத் திட்டம் தொடர்பாக கப்பற்படை அதிகாரி தினேஷ் திரிபாதி தெரிவித்திருப்பதாவது, கப்பற்படை தலைமையகம் வருகின்ற 25 ஆம் தேதி முதல் அக்னி திட்டத்தின் கீழ் ஆள் சேர்ப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட உள்ளது.

என்ற திட்டத்தின் கீழ் முதல் கட்ட சேர்க்கை வருகின்ற நவம்பர் மாதம் 26ஆம் தேதி நடைபெற உள்ளது அக்னிபத் திட்டத்தின் கீழ் கடற்படையில் ஆண்கள் மற்றும் பெண்கள் என்று இருபாலரும் இணையலாம் என்று தெரிவித்திருக்கிறார்.

அக்னிபத் திட்டம் தொடர்பாக விமானப்படை அதிகாரி எஸ் கே ஜா தெரிவித்திருப்பதாவது, விமானப்படையில் அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆள்சேர்ப்பு வருகின்ற 24 ஆம் தேதி முதல் பதிவு செய்யலாம் என்று தெரிவித்திருக்கிறார்.

முதல்கட்டமாக தேர்வாகும் அவர்களுக்கு டிசம்பர் மாதம் 30ஆம் தேதி முதல் பயிற்சி வழங்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

Previous articleஇளைஞர் அணி கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பு! பரோட்டா சூரியை மிஞ்சிய திமுக நிர்வாகிகள்!
Next articleஇந்தியா தென்னாப்பிரிக்கா t20 கிரிகெட் குறுக்கிட்ட மழை! கோப்பையை பகிர்ந்து கொண்ட அணிகள்!