இனி கர்ப்பிணி பெண்களுக்கு நோய் தொற்று பரிசோதனை அவசியமில்லை! ஆனால் அவர்களுக்கு நிச்சயமாக பரிசோதனை செய்யப்பட வேண்டும்!

0
253

பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கப்படும் கர்ப்பிணி பெண்களுக்கும் அருவை சிகிச்சை செய்வதற்கும் நோய் தொற்று பரிசோதனை இனிவரும் காலங்களில் கட்டாயம் இல்லை என்று தமிழக பொது சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக மாநில பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் மருத்துவ சேவைகள் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குனருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மத்திய அரசின் அறிவுறுத்தலின் அடிப்படையில் நோய் தொற்று பரிசோதனைகள் தொடர்பாக புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

அதன் அடிப்படையில், காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிரமம், சுவாசக் கோளாறு, வாசனை மற்றும் சுவை இழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பவர்களுக்கு மட்டும் இனிவரும் காலங்களில் நோய் தொற்று பரிசோதனை செய்தால் போதும் என்று குறிப்பிட்டிருக்கிறார் செல்வ விநாயகம்.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் எல்லா நோயாளிகளுக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்வதற்கான தேவை இல்லை. குறிப்பாக அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் போன்றோருக்கு அறிகுறிகள் இல்லாமல் நோய் தொற்று பரிசோதனை செய்வதற்கு அரசியல் இல்லை என்று அந்த கடிதத்தின் மூலமாக தெரிவித்திருக்கிறார்.

அதே சமயத்தில் வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருகை தரும் பயணியர்கள் நிச்சயமாக நோய் தொற்று தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். அவர்களுக்கு நோய் தொற்று அறிகுறிகள் இருக்குமானால் அருகில் இருக்கின்ற சுகாதார நிலையங்களில் அது தொடர்பாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

Previous articleதிமுக ஒரு இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்படும் கட்சி! முன்னாள் அமைச்சர் விளாசல்!
Next articleஅந்த விசாரணை எப்ப தான்ப்பா முடியும்? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here