ரேஷன் கடைகளில் இனி பாமாயில் இல்லை!! அதற்கு பதிலாக வழங்கப்படும் பொருள் இதுதான்?
தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயிலை நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக தேங்காய் எண்ணெயை வழங்க கோரி உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழக ரேஷன் கடைகளில் சர்க்கரை, பாமாயில், பருப்பு, அரிசி, கோதுமை போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து அதை சில மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தி உள்ளது. இதையடுத்து உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து அவர்கள் தமிழக ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
சமீபத்தில் தமிழக அரசு 200 லட்சம் லிட்டர் பாமாயில் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த புள்ளிகளை வெளியிட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர், “தேங்காய்களுக்கு உரிய விலை தற்போது கிடைப்பதில்லை. இதனால் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்கினால் விவசாயிகள் பயன் பெறுவர்” என்று அவர் கூறியுள்ளார்.