ரேஷன் கடைகளில் கடந்த சில மாதங்களாவே பாமாயில் மக்களுக்கு சரிவர கிடைப்பது இல்லை. இந்நிலையில் இனிமேல் ரேஷன் கடைகளில் பாமாயில் கிடைக்காது என்றும் மேலும் தேங்காய் எண்ணெய்தான் கிடைக்கும் என்றும் தகவல்கள் பரவி வரும் நிலையில் இதற்கு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர் பாண்டியன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு தற்பொழுது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று(ஆகஸ்ட்6) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு சார்பாக கள் இறக்க அனுமதி தர வேண்டும், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநாயகம் செய்ய. வேண்டும் என்று பல கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டாத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து விவசாயிகள் சங்கத் தலைவர்பி.ஆர் பாண்டியன் அவர்கள் இந்த போராட்டம் குறித்து “சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து கள் இயக்கலாம் என்று கூறியுள்ள நிலையில் தமிழக அரசு அதை கண்டுகொள்ளாமல் இருப்பது கலவையை அளிக்கின்றது. தமிழக விவசாயிகள் பல ஆண்டுகளாக இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் நிலையில் அரசு தமிழகத்தில் கள் இறக்க அனுமதி தர வேண்டும்.
மத்திய அரசு ஒரு இடத்தில் விளையும் பொருளை எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கும் நிலையில் தமிழக அரசால் இறக்குமதி செய்யப்படும் கள்ளை கேரளாவிலும் நிற்க தடை பிறப்பிக்க கூடாது
பாயாயில் பற்றி பேச வேண்டுமென்றால் பாமாயிலை பயன்படுத்தும் பொழுது புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருக்கின்றது. இதற்கான சோதனை தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இந்த பாமாயில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றது. அதன் பிறகு மக்களுக்கு இந்த பாமாயில் ரேஷன் கடைகள் மூலமாக விநியோகம் செய்யப்படுகின்றது.
எனவே உயிர்கொல்லி நோயை ஏற்படுத்தும் பாமாயிலை வழங்குவதற்கு பதிலாக இயற்கையான சத்துக்கள் நிறைந்த தமிழக விவசாயிகள் தயாரிக்கும் எள் எண்ணெய், தேங்காய் எண்ணெய், நிலக்கடலை எண்ணெய் ஆகியவற்றை ரேஷன் கடைகளில் வழங்க வேண்டும். தற்பொழுது நடந்து வரும் போராட்டத்தில் விவசாயிகள் வைக்கும் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும். இல்லேயென்றால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப் போகிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.