இனி பான் கார்டில் இதை பயன்படுத்த தடை!! மத்திய அரசு அறிவிப்பு!!

Photo of author

By Jeevitha

பான் கார்டுகள் இந்த காலகட்டத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாகும். அதிகம் வருமானம் பெறுபவர்கள் ஆண்டுதோறும் தங்களது வருமான வரவு கணக்கை தாக்கல் செய்வது அவசியமாகும். அதற்கு பான் கார்டு மிக முக்கியம். அது மட்டும் அல்லாமல் நிதி சார்ந்த பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றால்  நமக்கு பான் கார்டுகள் கட்டாயம் தேவை.

பெரிய அளவிலான தொகைகளை அதாவது 50 ஆயிரம் ரூபாய்க்கு மேலான தொகையை அனுப்ப வேண்டுமானால் பான் கார்டு இருந்தால் மட்டுமே முடியும். அந்த வகையில் தற்போது பான் கார்டு பயன்படுத்துவோருக்கு மத்திய அரசு ஒரு முக்கிய தகவலை வழங்கியுள்ளது. அதாவது “ஐ4சி” என்று சொல்லபடும் இந்திய சைபர் கிரைம் மையம், இது தொடர்பான நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள், நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு புதிய உத்தரவினை பிறப்பித்திருக்கிறது.

அதன்படி பான் கார்டு விவரங்களை உரிய அனுமதி மற்றும் அங்கீகாரமின்றி பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் தனி நபரின் பெயர்,முகவரி, தொலைபேசி எண் மற்றும் சில தனி தகவல்கள் சில நிறுவனங்கள் பெற்று அவற்றை வணிக நோக்கில் பகிர்வதோடு, தனிநபரின் கடன் தகுதியை அறியக்கூடிய சிபில் கிரெடிட் அறிந்து அவர்களை அடைகின்றனர். இதனால் ஒருவருடைய தொழில்நுட்ப சேவையும் அவரின் அனுமதி இல்லாமல் பெறுவதாக கூறப்படுகிறது.  இதனால் தான் அரசு இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது. இது பொதுமக்களின் பாதுகாப்புக்காக இந்த செயல்முறை அறிவிக்கப்பட்டுள்ளது.