தமிழகத்திற்கு இனி ஊரடங்கு தேவை இல்லை: முன்னாள் சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி அதிரடி?

Photo of author

By Pavithra

சில நாட்களாக தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தலைநகர் சென்னையிலும் மற்ற மாவட்டங்களிலும் முன்பை விட கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டு இருக்கிறது.சொல்லப்போனால் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது என்றே கூறலாம்.

இது குறித்து, தமிழகத்தில் எப்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பும் என பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை முன்னாள் இயக்குனர் குழந்தைசாமி கூறினார்.

நகர் பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும், கிராம பகுதிகளில் குறைவான அளவே பாதிப்பு இருக்கும்.கணிசமாக நவம்பர் மாத இறுதியில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துவிடும். அதன் பிறகு தமிழகத்திற்கு ஊரடங்கு தேவையில்லை.அடுத்த மாதம் (ஆகஸ்ட்) முதல் பேருந்து,ரயில்களை இயக்கலாம் என அவர் தெரிவித்தார்.

ஆனால் தொற்று குறைந்த பின்பும் சில மாதங்களுக்கு மட்டும் 60 வயதிற்கு மேலானோர் வீட்டை விட்டு தேவையின்றி வெளியே வருவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் எனவும், மேலும் பொதுமக்கள்,முகக்கவசம் அணிவதையும் சோப்பு போட்டு கைகழுவுதலையும்,சமூக இடைவெளி பின்பற்றுவதையும் தனது அன்றாட வாழ்வில் கட்டாயம் ஆக்கிக்கொள்ள வேண்டும் என்றும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை முன்னாள் இயக்குனர் குழந்தைசாமி தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.