கோடா நாடு கொலை வழக்கு!! எடப்பாடி பழனிசாமிக்கு ஜெக் வைத்த உயர்நீதிமன்றம் தப்பிப்பாரா?

Photo of author

By Sakthi

கோடா நாடு கொலை வழக்கு!! எடப்பாடி பழனிசாமிக்கு ஜெக் வைத்த உயர்நீதிமன்றம் தப்பிப்பாரா?

Sakthi

No need to investigate Edappadi Palanisam in Koda Nadu case, High Court orders

Koda Nadu case:கோடா நாடு வழக்குகாக  எடப்பாடி பழனிசாமயிடம் விசாரணை நடத்த தேவை இல்லை உயர்நீதிமன்றம் அறவிப்பு.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாக்கு சொந்தமாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கோடநாடு எஸ்டேட் உள்ளது.  கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்பரல் 23 ஆம் தேதி கோடநாடு எஸ்டேட்ல் மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டார்கள். அந்த கொள்ளை சம்பவத்தில் மிக முக்கியமான ஆவணங்கள் திருடுப் போய் இருக்கிறது. மேலும், இந்த கொள்ளை சம்பவத்திற்காக எஸ்டேட்டின் காவலாளி பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.

இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில்  குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். அதன் பிறகு இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக தீபு, சதீஷன், ஜம்சேர் அலி, சந்தோஷ் சாமி  மற்றும் டப்பாடி பழனிசாமி, சசிகலா மற்றும் உறவினர்கள் இளவரசி, சுதாகரன், என 8 பேரிடம் விசாரணை நடத்த வேண்டும் என எதிர்தரப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்து. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் தங்களது மனுவை முன் வைத்தார்கள் அதில் கோடா நாடு வழக்கு தற்போது  புலன் விசாரணை நடத்தி வருகிறது. விசாரணைக்கு பிறகு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என அறிவித்து இருந்தார்கள்.

இந்த நிலையில் எதிர் தரப்பு சாட்சிகளை விசாரணை நடத்தப்படும் போது, தேவைப்பட்டால் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்கலாம் என அறிவித்து இருக்கிறது. மேலும், இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.