அது இருக்கும் வரை தமிழினையும் தமிழகத்தையும் யாராலும் வீழ்த்த முடியாது! முதலமைச்சர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!

Photo of author

By Sakthi

திராவிடர் முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அணியின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கொண்டாடுவதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் காணொலிக் காட்சியின் மூலமாக அந்த கட்சியின் தலைவரும், தமிழகத்தின் முதல் அமைச்சருமான ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது, வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்ற முழக்கத்துடன் தங்களுடைய தேக்கு மர தேகத்தை தீன் தமிழுக்காக அர்ப்பணித்தவர்கள் எல்லோருக்கும் வீரவணக்கம் செலுத்துகிறேன். 1938ஆம் வருடம் தமிழகத்தில் நடைபெற்ற மொழி போராட்டத்தின் தாக்கம் தான் இந்த வருடம் வரையில் அணையாமல் இருந்து வருகிறது.

தமிழ், தமிழ் என பேசிக் கொண்டிருந்தால் அது குறுகிய மனப்பான்மை கிடையாது. இந்தி மட்டுமல்ல எந்த மொழிக்கும் தனிப்பட்ட முறையில் நாம் எதிரிகள் கிடையாது. நாம் இந்தியை எதிர்க்கவில்லை இந்தியின் ஆதிக்கத்தை தான் எதிர்க்கிறோம் என தெரிவித்திருக்கிறார்.

மேலும் இந்தி மொழியை கிடையாது ஆனால் இந்தி திணிப்பை கட்டாயம் எதிர்க்கிறோம். தமிழ் மொழி பற்றாளர்கள் தவிர்த்து எந்த மொழி மீதான வெறுப்பாளர்களும் கிடையாது. ஒருவர் ஒரு மொழியை கற்றுக்கொள்வது என்பது அவர்களுடைய விருப்பமாக தான் இருக்கிறது. நினைப்பவர்கள் அதனை ஆதிக்கத்தின் அடிப்படையில் குறியீடாகவே திணிக்கிறார்கள்.

ஒரே ஒரு மதம் தான் இருக்கவேண்டும் என்று நினைப்பது போல ஒரே ஒரு மொழிதான் தான் இருக்கவேண்டும் அது ஹிந்தியாக இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியை திணிப்பதன் மூலம் இந்தி பேசும் மக்களை அனைத்து துறைகளிலும் திணிக்க முயற்சிக்கிறார்கள். இந்தியை படிப்பதன் மூலமாக மற்ற மொழி பேசும் மக்களை இரண்டாம் தர மக்களாக வைக்க நினைக்கிறார்கள்.

ஒருவருடைய தாய் மொழியின் இடத்தை பறித்துக்கொண்டு அந்த இடத்தில் இந்தி மொழியை அமர வைக்க நினைக்கிறார்கள் இதன் காரணமாகதான் இந்தி மொழியின் ஆதிக்கத்தை எதிர்க்கின்றோம் என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழ் என்றாலும், சரி தமிழ்நாடு என்றாலும் சரி அவர்களுக்கு ஏனோ கசந்து போகிறது இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய முக்கியமான இரண்டு நாட்கள் இருக்கிறது. 1 ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினம் மற்றொன்று ஜனவரி மாதம் 26ஆம் தேதி குடியரசு தினம், அந்த குடியரசு தின விழாவில் டெல்லியில் வாகனங்களுக்கு திட்டமிட்டு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

அதற்கு அவர்கள் தெரிவித்த காரணம் ஏற்றுக்கொள்வதாக இல்லை என கூறியிருக்கிறார். வீரமங்கை வேலுநாச்சியாரை, மானம் காத்த மருது பாண்டியரை, மகாகவி பாரதியாரை மற்றும் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனார் உள்ளிட்டோரை யார் என்று கேட்பதற்கு இவர்கள் யார்? கடந்த 1938ம் வருடம் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்ட காலம் முதல் தற்போதைய ஆண்டு வரையில் குடியரசுதினவிழா வரையில் அவர்களுக்கு தமிழகத்தை பற்றி எள்ளளவும் புரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும் என கூறியிருக்கிறார் முதலமைச்சர்.

தமிழ் மொழிக்கு ஒரு ஆபத்து என்று வந்துவிட்டால், தமிழ் மக்களுக்கு ஒரு ஆபத்து என்று வந்து விட்டால், அதற்காக எல்லாவிதமான தியாகத்திற்கும் தயாராக இருப்பவர்கள் நாம் அரசியல் இயக்கமாக செயல்படுவதும், தேர்தல் அரசியலில் பங்கு எடுப்பதும், இவ்வாறாக அமைய வேண்டும்.எல்லா தமிழர்களும் மேன்மையுற வேண்டும் அதற்கான காலமும் அமைய வேண்டும் எந்த நோக்கத்திற்காக திமுக ஏற்படுத்தப்பட்டதோ அந்த நோக்கத்தில் இருந்து எள்ளளவும் மாறாமல் கழகம் செயல்படும்.

எல்லோருக்குள்ளும் ஓடுவது சிவப்பு நிற ரத்தமாக இருக்கலாம் நமக்குள் ஓடுவது கருப்பு சிவப்பு வகை ரத்தம் என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த கருப்பு சிவப்பு ரத்தத்தில் சூடு இருக்கும் வரையில் இந்த இயக்கத்தையும் தமிழகத்தையும் யாராலும் வீழ்த்த இயலாது என முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றி இருக்கிறார்.