என்ன இவர் தேர்வு செய்த அணியில் இவர்களுக்கு இடமில்லையா? கிரிக்கெட் வீரர்களுக்கு அதிர்ச்சி!

0
127

கிரிக்கெட் விளையாட்டின் மிகப்பெரிய சகாப்தமான சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியினடிப்படையில் 11 வீரர்களை தேர்வு செய்திருக்கிறார்.

சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்த இந்த அணியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட்கோலி, உள்ளிட்டோருக்கு இடமளிக்கப்படவில்லை.

இருவருடைய ஆட்டமும் இந்த ஐபிஎல் போட்டியில் மோசமாக இருந்ததால் அவர்களைத் தேர்வு செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது.

அதோடு இந்தத் தொடரில் விராட்கோலி 341 ரன்கள் சேர்த்திருந்தார், அவருடைய சராசரி 22.73 ஆக இருந்து வருகிறது. ரோகித் சர்மாவின் சராசரி 19.14 என இருக்கிறது. மேலும் அவர் விளையாடிய 14 ஆட்டங்களில் ஒட்டுமொத்தமாக 268 ரன்கள் மட்டுமே சேர்த்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்த குஜராத் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா டெண்டுல்கர் அணி தேர்வு செய்த லெவனுக்கு கேப்டனாக இருந்து வருகிறார்.

ஜோஸ் பட்லர், ஷிகர் தவான், உள்ளிட்டோர் தொடக்க வீரர்களாகவும் 3வது வரிசைக்கு லோகேஷ் ராகுலையும், அவர் தேர்வு செய்துள்ளார்.

தமிழ்நாட்டைச் சார்ந்த தினேஷ் கார்த்திக் அவர்களுக்கு இந்த அணியில் இடம் கிடைத்திருக்கிறது மேற்கிந்திய தீவுகள் அணி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட 4 வீரர்களுக்கு அவருடைய அணியில் இடம் கிடைக்கவில்லை.

சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்திருக்கின்ற வீரர்கள் பட்டியல் வருமாறு- ஜோஸ் பட்லர், ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், லிவிங்ஸ்டோன், தினேஷ் கார்த்திக், ரஷித்கான், முகமதுஷமி, பும்ரா, யுஸ்வேந்திர சாகல்.

உள்ளிட்டோரும் மற்றும் குஜராத் அணியில் 4 பேரும், ராஜஸ்தான், பஞ்சாப், உள்ளிட்டவைகளில் தலா 2 பேரும் லக்னோ, பெங்களூரு, மும்பை, உள்ளிட்ட அணிகளில் தலா ஒருவரும் இடம் பெற்றிருக்கிறார்கள்.

சென்னை, டெல்லி, கல்கத்தா, ஹைதராபாத், உள்ளிட்ட அணிகளிலிருந்து ஒருவர் கூட இடம்பெறவில்லை என சொல்லப்படுகிறது.

Previous articleஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்த அந்த தகவல்! கச்சா எண்ணெயின் விலை கிடுகிடு உயர்வு!
Next articleஇரவு நேரத்தில் ஏற்பட்ட கோர விபத்து! 57 பேர் படுகாயம்!