வடகிழக்கு பருவமழை சராசரியை விட அதிக அளவில் இருக்கும்! வேளாண் பல்கலைக்கழகம் எச்சரிக்கை!

Photo of author

By Sakthi

வடகிழக்கு பருவ மழை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் சராசரியை விட அதிக அளவில் பெய்யும் என்று வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் காலநிலை ஆராய்ச்சி மையம் சார்பாக பருவமழை தொடர்பான முன்னறிவிப்பு வெளியிடப்படுகிறது.

இதனடிப்படையில் கோவை, அரியலூர், தர்மபுரி, ஈரோடு, திண்டுக்கல் கரூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, பெரம்பலூர், சேலம், தஞ்சை, நாகை, திருச்சி, நீலகிரி, திருவாரூர், தூத்துக்குடி, தென்காசி, திருப்பூர், திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் சராசரி மழை அளவு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி, கடலூர், காஞ்சிபுரம், தேனி, மதுரை, திருவள்ளூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருநெல்வேலி, வேலூர் மற்றும் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் சராசரி மழை விட அதிக அளவு மழை பொழிவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.