அதெல்லாம் ஒன்னுமில்ல எல்லாம் டூப்பு! போட்டுடைத்த எஸ் பி வேலுமணி!

Photo of author

By Sakthi

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கடந்த 2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரை அமைச்சராக பொறுப்பு வகித்த காலத்தில் 58.23 கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது இதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வந்தது லஞ்ச ஒழிப்புத்துறை.

அதாவது கடந்த ஆகஸ்ட் மாதம் எஸ் பி வேலுமணி இன் வீடு உட்பட 60 இடங்களில் அதிரடி சோதனையை செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை.

இதனைத்தொடர்ந்து மறுபடியும் நேற்றைய தினம் அவருடைய வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டார்கள் கோயமுத்தூரில் 41 இடங்கள் சென்னையில் 8 இடங்கள் சேலத்தில் 4 இடங்கள் என்று அவருக்கு தொடர்பான 50 இடங்களில் சோதனை நடைபெற்றதாக தெரிகிறது.

லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் தங்க நகைகள் வெள்ளி நகைகள் கணக்கில் காட்டப்படாத பணம் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் அவர் கிரிப்டோகரன்சி களில் முதலீடு செய்திருப்பது இந்த விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது. அதோடு பல வங்கிகளில் பெற்ற சாதிகளின் மடிக்கணினி கணினியின் ஹார்ட் டிஸ்க் அதோடு வழக்கிற்கு தேவையான ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி இடம் கேள்வி எழுப்பிய போது அதனுடைய வீட்டிலிருந்து ஒரு ரூபாய் கூட கைப்பற்றப்படவில்லை என்று அவர் தெரிவித்திருக்கிறார் திமுக தன்னை அரசியல் ரீதியாக எதிர்ப்பவர்களின் வீடுகளில் இதுபோன்ற சோதனை செய்து அவர்கள் மீது வீண்பழி சுமத்தி வருவதாக குற்றம் சாட்டி இருக்கிறார்.

லஞ்ச ஒழிப்பு துறை சோதனை என்பது திமுகவின் காழ்ப்புணர்ச்சியால் நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்திருக்கிறார் அதோடு இதனை சட்டரீதியாக நான் எதிர் கொள்வேன் என்றும் கூறியிருக்கிறார்.