ADMK AMMK TVK: சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில், அதிமுக, திமுக, தவெக, பாமக, தேமுதிக என கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கூட்டணி குறித்த வியூகங்களும் வகுக்கப்பட்டு வரும் நிலையில், தவெக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற கேள்வி ஆளுங்கட்சி தொடங்கி சிறிய கட்சிகள் வரை பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று விஜய் தலைமையில் நடந்த தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், தவெக தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என்றும், கூட்டணி குறித்த முழு அதிகாரமும் விஜய்யிடம் உள்ளது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் தவெக திமுகவுக்கு இடையேயான போட்டி இனிமேல் தான் தீவிரமடைய போகிறது என்று விஜய் கூறினார். இதற்கு முன் நடந்த தவெக பிரச்சாரம், மாநாடு என அனைத்திலும் திமுகவிற்கும் தவெகவிற்கும் தான் போட்டி என்று விஜய் கூறியது அதிமுகவிற்கு சாதகமாக அமைந்தாலும், நேற்று கூட்டத்தில் வெளியிட்ட அறிவிப்பு விஜய் அதிமுகவை கணக்கில் வைக்கவே இல்லை என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த அறிவிப்பு அதிமுக தலைமைக்கு பேரிடியாக இருந்தது. இந்நிலையில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவரது கருத்தை கூறி இருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர், நீங்கள் கணிக்க முடியாத அளவுக்கு வரும் தேர்தலில் கூட்டணி உருவாகும். தமிழ் நாட்டில் எந்த கூட்டணி எப்படி வேண்டுமானாலும் மாறலாம். எனக்கு தெரிந்த வரை திமுக கூட்டணிக்கும், தவெக தலைமையில் அமையும் கூட்டணிக்கும் தான் போட்டி நிலவும் என்பது என்னுடைய கருத்து என்று கூறி இருக்கிறார். விஜய் அதிமுக கூட்டணிக்கு நோ சொல்லி விட்டார் என்று ஏமாற்றத்தில் இருக்கும் இபிஎஸ்க்கு இது மேலும் அழுத்தத்தை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், அனைத்து இடங்களிலும் கரூர் சம்பவம் தொடர்பாக தவெகவின் குரலாக ஒலித்த இபிஎஸ்யை விஜய் லிஸ்டில் வைக்கவே இல்லை என்பதையும் டிடிவி தினகரன் தெளிவுபடுத்தியுள்ளார்.

