NDA லிஸ்ட்லயே இல்ல.. டிடிவி தினகரன் சொன்ன வார்த்தை!! கடுப்பான அமித்ஷா!!

0
77
Not in the NDA list.. TTV Dhinakaran's words!! Fierce Amit Shah!!
Not in the NDA list.. TTV Dhinakaran's words!! Fierce Amit Shah!!

AMMK BJP: தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் களம் புதிய வேகமெடுத்துள்ளது. SIR பணிகளும், கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடும் மும்முரமாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய அளவில் மிகப்பெரிய கட்சியான பாஜக பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற கையுடன் தமிழகம் நோக்கி திரும்பியுள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பே அதிமுக உடன் கூட்டணி அமைத்த பாஜக அடுத்ததாக விஜய்யை கூட்டணியில் சேர்க்க முயற்சித்தது.

ஆனால் விஜய் பாஜகவை கொள்கை எதிரி என்று கூறியதால் அதனுடன் கூட்டணி இல்லை என்ற முடிவில் தெளிவாக உள்ளார். இதனால் விஜய்யின் அரசியல் பிரவேசம் பாஜகவிற்கு பெரும் இழப்பாக அமையும் என்று கருதப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், டிடிவி தினகரன் ஒரு கருத்தை கூறியுள்ளார். அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இபிஎஸ்யை முதல்வர் வேட்பாளராக ஏற்காத முடியாது என்று கூறி பாஜகவை விட்டு வெளியேறினார். இவர் பாஜகவிலிருந்து வெளியேறியதிலிருந்தே அவருக்கும் பாஜகவுக்கும் பல்வேறு முரண்பாடுகள் நிலவி வருகின்றன.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழக சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையில் கூட்டணி அமைந்தால், NDA கூட்டணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும் என்று எச்சரித்துள்ளார். தமிழகத்தில் காலூன்ற முடியாமல் தவிக்கும் பாஜக விஜய்யின் வருகையால் அதிருப்தியில் உள்ள நிலையில், டிடிவி தினகரன் இவ்வாறான கருத்தை கூறியது பாஜகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர் விஜய்க்கு தொடர்ந்து ஆதரவாக பேசி வருவது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleமக்கள் ஏற்றுக்கொள்ளாத தலைவர் எடப்பாடி பழனிசாமி.. தவெகவின் டாப் தலை பர பர பேட்டி!!
Next articleபுதுச்சேரியில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை.. விஜய் போட்ட கண்டிஷன்!!