இனி ரீசார்ஜ் செய்வதற்கு மட்டுமல்ல!! மொபைல் எண்ணை பயன்படுத்தவும் தனி கட்டணம்- ட்ராய் அதிரடி திட்டம்!!

Photo of author

By Janani

இனி ரீசார்ஜ் செய்வதற்கு மட்டுமல்ல!! மொபைல் எண்ணை பயன்படுத்தவும் தனி கட்டணம்- ட்ராய் அதிரடி திட்டம்!!

மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் இனி மொபைல் எண்களுக்கு தனி கட்டணம் செலுத்தும் முறையை அமல் படுத்த திட்டமிட்டு வருகிறது.

தற்போது பயன்படுத்தி வரும் மொபைல்களில் ரீசார்ஜ் செய்வதற்கு மட்டும் இன்றி இனி பயன்படுத்தும் மொபைல் எண்களுக்கும் தனி கட்டணம் வசூலிக்க டிராய் திட்டமிட்டு வருகிறதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டமானது கடந்த டிசம்பரில் நிறைவேற்றப்பட்ட தொலைத் தொடர்பு சட்டத்தின் கீழ் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆன டிராய், பொதுமக்கள் போன் பேச மற்றும் இணையம் பயன்படுத்த மட்டுமே செலுத்தும் கட்டணத்தை தவிர மொபைல் எண்ணிற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று திட்டத்தை பரிசீலித்து வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் நாம் பயன்படுத்தும் மொபைல் மற்றும் லேண்ட்லைன் எண்களுக்கான கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்ட உள்ளது. மேலும் இது ஒரு முறை அல்லது வருடாந்திர கட்டணமாகவும் அல்லது பிரீமியம் எண்களுக்கு ஏலம் விடுவது போன்ற முறைகளாகவும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.மேலும் இந்த திட்டமானது தொலைதொடர்பு நிறுவனங்கள் மூலம் வசூலிக்கபட உள்ளதாக கூறப்படுகிறது.