Breaking News, Politics, State

விஜய் அரசியலை விட்டு ஒழியும் வரை எதற்கும் அனுமதி இல்லை.. திமுக போட்ட மாஸ்டர் பிளான்!!

Photo of author

By Madhu

TVK DMK: தமிழ் திரையுலகில் மிக பிரபலமாகவும், முன்னணி நடிகராகவும் அறியப்பட்டவர் விஜய். இவர் சுமார் ன்றரை வருடத்திற்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். பிறகு 2 மாநாடுகள் 6 பிரச்சாரங்களை நடத்திய அக்கட்சி கரூரில் பரப்புரை மேற்கொள்ளும் போது எதிர்பாராத விதமாக 41 பேர் உயிரிழந்தனர்.

இதனை வைத்து தவெகவை வீழ்த்தி விடலாம் என்று திட்டம் தீட்டிய திமுக பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்தது. கரூர் பரப்புரைக்கு முன் தவெக பரப்புரை மேற்கொள்வதற்காக பல்வேறு இடங்களில் அனுமதி கேட்டும் திமுக அரசு அதற்கு அனுமதி அளிக்கவில்லை. அப்படியே அனுமதி அளித்தாலும், மற்ற கட்சிகளுக்கு விதிக்கும்   கட்டுபாடுகளை விட விஜய் கட்சிக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இதனை எதிர்த்த தவெக தலைவர்  நீதி மன்றத்திற்க்கு செல்ல இருப்பதாகவும் தகவல் பரவியது. இதனை தொடர்ந்து கரூர் சம்பவம் நடந்து 1 மாதத்திற்கு மேலாகியும் விஜய் இன்னும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கவில்லை என்ற புகார் தொடர்ந்து எழுந்து வருகிறது. இந்த விமர்ச்சனத்தை வைத்து விஜய் ஒரு நல்ல அரசியல் தலைவர் இல்லை என்று மக்களுக்கு நிரூபிக்க வேண்டுமென்று திமுக போராடி வருகிறது என்றும் சொல்லப்படுகிறது.

பாதிக்கபட்டவர்களை  சந்திப்பதற்காக விஜய் தரப்பு பல முயற்சிகளை மேற்கொண்டும் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்காதது போல இதற்கும் அனுமதி அளிக்கமால் திமுக  காலம் தாழ்த்தி வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கரூர் செல்வதற்கு பாதுகாப்பு வழங்க கோரி தமிழக டிஜிபிக்கு விஜய் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது. 

பாஜக-விசிக தான் கரெக்டா இருக்கும்.. எங்க கூட வந்துடுங்க திருமா.. நயினாரின் புதிய பிளேன்!!

மோதிக்கொண்ட துரைமுருகன்-செல்வப்பெருந்தகை.. திமுக கதை முடியும் நேரம் வந்துவிட்டது போல.. ஸ்டாலின் வேதனை!!