
DMK: இந்திய முழுவதும் அதிகரித்துள்ள ஒரு நிகழ்வு பாலியல் வன்கொடுமை. அதிலும் மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் அது அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இதனை தடுக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டுமென்று பலரும் கோரிக்கை வைத்து வருவதுடன், போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். மற்ற நாடுகளை போல கடுமையான தண்டனையை இந்தியாவிலும் கொண்டு வர வேண்டுமென்ற குரல் எல்லா மூளையிலும் ஒலித்து வருகிறது. சாதிய வன்கொடுமைக்கு எதிராக தனி சட்டம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் கூறினார்.
இவரை தொடர்ந்து இன்று சென்னை வட கிழக்கு மாவட்ட மகளிர் தொண்டர் அணி சார்பில் இளம் பெண்கள் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கனிமொழி எம்.பி கலந்து கொண்டு பேசினார். அப்போது மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், அதிகரிக்கும் பாலியல் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என்று கேள்வியெழுப்பிய மாணவிக்கு, நம் விட்டு பெண்களை கண்டித்து, பாதுகாப்பு சொல்லி கொடுக்கும் பெற்றோர் அவர்களின் வீட்டில் வளரும் ஆண் பிள்ளைகளுக்கும் பெண்களை ஏளனமாக பார்க்க கூடாது, பெண்ணின் அனுமதி இல்லாமல் அவளை தொடுவது தவறு என்று சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆண்களுக்கு சொல்லி கொடுக்கும் வரை சமூகம் மாறாது என்பதையும் வலியுறுத்தி பேசினார். இவரின் இந்த கருத்தை கேட்ட நெட்டிசன்கள் சமூக வலை தளங்களில் கிண்டலடித்து வருகின்றனர். சாதிய வன்கொடுமைக்கு எதிராக எத்தனை போராட்டங்கள் நடத்தியும் அதனை கண்டு கொள்ளாமல் தேர்தல் நடக்கும் நேரத்தில் மட்டும் குழு அமைத்து வேஷம் போடும் திமுக அரசு, பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடுமையான சட்டத்தை இயற்றினால் மட்டுமே அதனை தடுக்க முடியுமென்பதை ஏன் உணரவில்லை என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் ஆண்களை ஒழுங்குப்படுத்த வேண்டுமென்று கூறும் திமுக எம்.பி முதலில் திமுக அரசை சீரமைக்க வேண்டுமென்றும் கூறுகின்றனர். அப்போது தான் இந்த வகையான கொடுமைகள் நிகழாமல் இருக்குமென்பது அவர்களின் கருத்து.
