பட்டமேற்படிப்பிற்கான விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு?

Photo of author

By Pavithra

பட்டமேற்படிப்பிற்கான விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு?

Pavithra

ஐஐடி மற்றும் ஐஐஎஸ்சி கல்வி நிறுவனங்களில் பட்டப் படிப்பை மேற்கொள்ள ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் மற்றும் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகின்ற அக்டோபர் 15 ஆகும்.

பட்ட மேற்படிப்பில் சேர்வதற்கு, ஜேஏஎம் (joint Admission test form Masters) தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த தேர்வு வருகின்ற 2021 பிப்ரவரி 14 – ல் நடைபெற உள்ளது. எம்எஸ்சி, ஜாயின்ட் எம்எஸ்சி-பிஎஸ்சி உள்ளிட்ட பட்ட மேற்படிப்புகளை படிப்பதற்கு இந்த தேர்வை எழுதி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த கல்வி நிறுவனங்களில் பட்ட மேற்படிப்பை மேற்கொள்ள முடியும். ஜேஏஎம் தேர்வு இரண்டு கட்டங்களாக நடக்கும்.
முதல் கட்டத்தில், உயிர் தொழில்நுட்பம்,கணித அறிவியல் மற்றும் உயிரியல் படிப்புகளுக்கும், இரண்டாவது கட்டத்தில்,வேதியியல், பொருளாதாரம்,புவியியல் மற்றும் கணித படிப்புகளுக்கும் நடக்கும்.இந்த தேர்வின் முடிவுகள் 2021 மார்ச்20 அன்று வெளியாகும்.