இனி மாணவர்கள் அனைவரும் இந்த தேர்வை கட்டாயமாக எழுத வேண்டும்! தேர்வுத்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! 

Photo of author

By Sakthi

 

தமிழகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் அனைவரும் இனிமேல் தமிழ் மொழித் தேர்வை கட்டாயமாக எழுத வேண்டும் என்று தேர்வுத்துறை அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாய பாடமாக மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகின்றது. தமிழ் மொழி அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயம் என்ற நடைமுறை இருந்து வருகின்றது. அதன்படி தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் தமிழ் மொழி தேர்வு எழுதுவது கட்டாயம் ஆக்கப்பட்டு இருக்கின்றது. சிறுபான்மையினர் மாணவர்களும் தமிழ் மொழித் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும் என்ற நடைமுறை இருக்கின்றது.

இதற்கு மத்தியில் சிறுபான்மையின மாணவ மாணவிகள் அனைவருக்கும் தமிழ் மொழியில் தேர்வு எழுதுவதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அவரவர்களுடைய சொந்த தாய் மொழியில் தேர்வு எழுத வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் தமிழ் மொழித் தேர்வை எழுதவும் தமிழ் மொழியை கட்டாய பாடம் ஆக்குவதிலும் ஒரு வருடத்திற்கு விலக்கு அளித்தது.

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி கடந்த வருடம் சிறுபான்மையின மாணவர்களுக்கு தமிழ் மொழியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக தேர்வுத்துறை தற்பொழுது முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் “தமிழ் மொழி அல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை தாய் மொழியாக கொண்ட சிறுபான்மையின மாணவர்களும் தமிழ் மொழியில் கட்டாயமாக தேர்வு எழுத வேண்டும். அடுத்து பொதுத் தேர்வு எழுத காத்திருக்கும் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களின் 13 வகையான விவரங்களை சரி பார்க்க வேண்டும்.

இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவரும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக 10ம் வகுப்பு மாணவ மாணவிகள் அனைவரும் தமிழ் மொழியில் கட்டாயமாக தேர்வு எழுத வேண்டும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.