இனி டிரைவிங் லைசன்ஸ் வாங்குவது மிக எளிது!! மத்திய அரசின் சூப்பர் வசதி!!

Photo of author

By Jeevitha

டிரைவிங் லைசன்ஸ் என்பது மிக முக்கிய ஆவணமாகும். ஏனெனில் இது ஒரு அரசாங்க ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஓட்டுனரும் கட்டாயம் டிரைவிங் லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் வாகனம் ஓட்டினால் கட்டாயம் அபராதம் விதிக்கப்படும். இந்த நிலையில் சாலை போக்குவரத்து மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் குடிமக்களுக்கு ஆன்லைனில் வீட்டில் இருந்தே கற்றல் உரிமத்தை பெற விண்ணப்பிக்கும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.

மேலும் இணையதளம் மூலம் தேர்வில் கலந்து கொண்டு அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் அளித்து தேர்ச்சி பெற்றால் உரிம இணைப்பு அனுப்பப்படும் என தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தால் கற்றல் உரிமம் பெற RTO அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆன்லைனில் கேள்விகள் கேட்கப்பட்டு உரிமம் வழங்கப்படும். கற்றல் உரிமம் பெற sarathi.parivahan.gov.in/sarathiservice/stateselection.do என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.

அதில் 10 கேள்விகள் கேட்கப்படும். 6 கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தால் சோதனையை முடித்த பிறகு உங்கள் தொலைபேசி எண்ணிற்கு கற்றல் உரிமம் அனுப்பப்படும். அதில் முதல் தேர்வில் நீங்கள் தேர்ச்சி பெறவில்லை என்றால் இரண்டாவது தேர்வுக்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் கட்டாயமாக நிரந்தர ஓட்டுநர் உரிமத்தை பெற போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். மேலும் மோட்டார் வாகன சட்டம் 1998-ன் படி, நாட்டின் எந்த மூலையிலும் ஒருவர் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் அவருக்கு அபராதம் விதிக்கப்படும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.