இனி அனைத்து அரசு பள்ளிகளிலும் சிபிஎஸ்சி பாடத்திட்டம் – வரும் கல்வியாண்டு முதல் அமல்!!

Photo of author

By Hasini

இனி அனைத்து அரசு பள்ளிகளிலும் சிபிஎஸ்சி பாடத்திட்டம் – வரும் கல்வியாண்டு முதல் அமல்!!

Hasini

Now CBSE Syllabus in All Govt Schools - Effective from Next Academic Year!!

இனி அனைத்து அரசு பள்ளிகளிலும் சிபிஎஸ்சி பாடத்திட்டம் – வரும் கல்வியாண்டு முதல் அமல்!!

புதுச்சேரி மாநிலத்தின் பள்ளிக்கல்வித்துறை இயக்குனரான பிரியதர்ஷினி இன்று ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில், ‘புதுச்சேரி அரசு துவக்க பள்ளிகளிலும் சிபிஎஸ்சி என்னும் மத்திய இடைநிலை கல்விவாரிய பாடத்திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.கடந்த 2023-24ம் கல்வியாண்டில் மட்டும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தமிழ்நாடு வாரிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில், “வரும் கல்வியாண்டான 2024-25ம் ஆண்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை முழுமையாக சிபிஎஸ்சி பாடத்திட்டம் அமலுக்கு வரவுள்ளது.இந்த திட்டத்திற்கான அரசாணை மற்றும் கல்வியாண்டின் நாட்காட்டி ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, இந்த சிபிஎல்சி பாடத்திட்டம் அமலுக்கு வரும் பட்சத்தில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 2025ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை பள்ளி வகுப்புகள் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே, வரும் கல்வியாண்டு முதல் அமலாகவுள்ள சிபிஎஸ்சி பாடத்திற்கான மாணவர்கள் சேர்க்கை அனைத்து அரசு பள்ளிகளிலும் வரும் 25ம் தேதி முதல் துவங்கப்படவுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.