இனி இவருக்கும் இழப்பீடு ரூபாய் பத்து லட்சம்!! அதிரடி காட்டிய மதுரை உயர் நீதிமன்ற கிளை!!

Photo of author

By Janani

இனி இவருக்கும் இழப்பீடு ரூபாய் பத்து லட்சம்!! அதிரடி காட்டிய மதுரை உயர் நீதிமன்ற கிளை!!

தமிழகத்தையே உலுக்கிய விஷசாராய மரணம் மிகவும் வேதனைக்குரியது.பல குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்து தவிக்கின்றனர்,பெண்கள் கணவரை பிரிந்த துக்கத்திலிருந்து மீண்டு வர முடியாமல் அழுது கொண்டு இருக்கிறார்கள்.இனிமேல் இப்படி ஒரு துயர சம்பவம் நிகழக் கூடாது என அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறிவருகின்றனர்.

ஆண்கள் போதைக்கு அடிமையாவதால் பல பெண்களின் வாழ்கை இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது.அரசு இதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து, கள்ள சந்தையில் போதை பொருட்கள் விற்பவர்களை கைது செய்து உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும்.விஷ சாராயம் குடித்து மரணம் அடைந்த குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூபாய் பத்து லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்திருந்தது.

இந்த நிலையில் திருச்சி மரவனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு ஒழிப்பு பணியாளராக கலையரசன் என்பவர் சென்ற ஆண்டு ,வேலை செய்யும் போது ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தார்.மகன் இறந்தையடுத்து ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி அவரது தந்தை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் தந்தது போல இவருக்கும் பத்து லட்சம் தர வேண்டுமென உத்தரவு பிறப்பித்துள்ளனர்.மேலும் அவர்கள்,தனது மகனை இழந்து வாடுபவற்கு இந்த தொகையை கொடுப்பதால் அரசுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படப்போவதில்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.