இனி வாகனம் திருட்டுப்போனால் 10 நிமிடத்தில் கண்டுபிடித்துவிடலாம்!! சென்னை போலீஸீன் அசத்தல் நடவடிக்கை!!

0
338
Now if the vehicle is stolen, it can be found in 10 minutes!! Crazy action of Chennai police!!
Now if the vehicle is stolen, it can be found in 10 minutes!! Crazy action of Chennai police!!

இனி வாகனம் திருட்டுப்போனால் 10 நிமிடத்தில் கண்டுபிடித்துவிடலாம்!! சென்னை போலீஸீன் அசத்தல் நடவடிக்கை!!

சென்னை போன்ற பெரு நகரங்களில் வாகன திருட்டு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.அந்த வகையில் திருடப்பட்ட வாகனங்களை திருடர்கள் செயின் பறிப்பு, கொலை, கொள்ளை சம்பவங்களுக்கு பயன்படுத்தும் வழக்கமும் அதிகரித்து வருகிறது.இவர்களை அடக்கும் விதமாக காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை
எடுத்து வருகிறது.அதில் குறிப்பிடும் விதமாக சென்னை போலீசார் ஒரு புதிய ஐடியாவை கொண்டு வந்துள்ளனர்.இதன் மூலம் மக்கள் தொலைந்து போன தங்களது வாகனம் குறித்து போலீசில் புகார் கொடுத்த உடனே ,நகரில் இருக்கும் அனைத்து அதிநவீன CCTV கேமராக்கள் தானாகவே உங்கள் வாகனத்தைத் தேடிக் கண்டுபிடிக்க தொடங்கி விடும்.

வாகனம் தொலைந்து போய்விட்டால் நீங்கள் IVMS எனப்படும் ஒருங்கிணைந்த வாகன கண்காணிப்பு அமைப்பின் கீழ் பதிவு செய்ய வேண்டும்.அதில் நீங்கள் தொலைந்து போன வாகனத்தின் பதிவு எண் உள்ளிட்ட சில அடிப்படை தரவுகளைத் தர வேண்டும்.இந்த IVMS தொழில்நுட்ப உதவியோடு வாகனத்தை கண்டு பிடித்து விடலாம்.IVMS என்பது கிரேட்டர் சென்னை போலீசாரால் 1.8 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இணைய அடிப்படையிலான செயலியாகும்.கடந்த 2021ஆம் ஆண்டு முதல் சென்னையில் தொலைந்து போன 3,200 வாகனங்களின் தரவுகளை போலீசார் ஏற்கனவே இந்த IVMS செயலியில் பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் பல இடங்களில் ANPR கேமராக்கள் இருக்கும் நிலையில், திருடப்பட்ட வாகனத்தின் நம்பர் பிளேட் இந்த கேமராக்களில் ஒன்றின் மூலம் கண்டறிந்தால் உடனடியாக இந்த IVMS செயலி அதன் விவரங்களைச் சரிபார்க்கும்.திருட்டு வழக்கு எப்போது பதிவு செய்யப்பட்டது, வழக்கு எண் உள்ளிட்ட தகவல்கள் உதவி கமிஷனர், துணை கமிஷனர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுக்கு நேரடியாக அனுப்பப்படுகிறது.

இந்த கேமராக்கள் வாகனம் மற்றும் அதில் பயணிப்போரின் போட்டோக்களை எடுத்து, அவர்களின் இருப்பிடம் தொடர்பான தகவல்களையும் போலீசாருக்கு அனுப்புகிறது.இரவு நேரங்கள், மோசமான வானிலை என எந்த சூழலிலும் புகைப் படங்களை இந்த கேமராக்களால் எடுக்க முடியும் என்பது மற்றொரு சிறப்பாகும்.இத்தகைய கடுமையான நடைவடிக்கைகள் முலம் வாகன திருட்டுகளை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும் என போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.