இனிமே இதுதான் ரூல் அதிரடியாக அறிவித்த தனியார் பள்ளி! அதிர்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள்!

Photo of author

By Sakthi

கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் மாதத்திலிருந்து நோய்த்தொற்று பரவல் காரணமாக தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதுமே பள்ளிகள் அனைத்தும் செயல்படாமல் இருந்தன. பின்பு மெல்ல, மெல்ல, நோய்த்தொற்று குறைய தொடங்கியதை தொடர்ந்து பள்ளிகள் செயல்பட தொடங்கினர்.

இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது, ஆனால் நோய் தொற்று மீண்டும் அதிகரித்ததையடுத்து பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படுவது தள்ளிவைக்கப்பட்டது.இந்த நிலையில், சமீபத்தில் பள்ளிகள் அனைத்தும் செயல்படத் தொடங்கினர்.

அதோடு கல்லூரிகள் உள்ளிட்டவையும் செயல்படத் தொடங்கினர்.சற்றேறக்குறைய தமிழகத்தில் இந்த நோய்த் தொற்று பாதிப்பு பெற்றபிறகு அனைத்து விதமான அரசு துறைகளும் செயல்பட தொடங்கிவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்தநிலையில், நோய்த் தொற்று பரவல் காரணமாக, கடலூர் மஞ்சக்குப்பத்தில் இருக்கின்ற தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியர்களுக்கு கடந்த 19 மாதங்களாக பாதி அளவிலான சம்பளம் மட்டுமே வழங்கி வந்திருக்கின்றது. இதனைத் தொடர்ந்து சில மாதங்களாக பள்ளிகள் திறந்த பின்னர் முழு சம்பளத்தை வழங்கியிருக்கிறது.

ஆனால் மறுபடியும் நோய்த் தொற்று பரவல் காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படத்தையடுத்து பள்ளி நிர்வாகம் ஆசிரியர்களுக்கு பாதி சம்பளம் மட்டுமே வழங்கியிருக்கிறது. இது தொடர்பாக ஆசிரியர்கள் நிர்வாகத்திடம் முறையிட சமயத்தில் இவ்வாறு பள்ளிக்கு விடுமுறை வழங்கப்பட்டால் பாதி சம்பளம் மட்டுமே வழங்கப்படும் என்று நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

ஆகவே பள்ளியின் இந்த அடாவடி போக்கை கண்டிக்கும் விதமாக தனியார் பள்ளி ஆசிரியர் சங்கத்தினர் குறிப்பிட்ட அந்த பள்ளி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். போராட்டத்தின் போது அவர்கள் முழு சம்பளம் வழங்க வேண்டும் இல்லையென்றால் எங்களது போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார்கள் இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு உண்டானது.