இப்போது இந்தி எதிர்ப்பு போராளிகள் எங்கே சென்றார்கள்? மாநில அரசால் ஏற்பட்ட சர்ச்சை!

Photo of author

By Sakthi

மத்திய அரசின் நிதியில் வழங்கப்படும் விற்பனை வண்டியில் முன்னாள் முதல்வர் படம் மற்றும் ஹிந்தி உள்ளிட்டவை இடம்பெற்றிருப்பது விமர்சனத்தை உண்டாக்கியிருக்கிறது.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் சாலையோரங்களில்.கடையமைத்து பூ, காய்கறி, பழங்கள், மற்றும் உணவு வகை, விற்பனை செய்போர் கடையை எளிதில் நகர்த்தி சென்று விற்பனை செய்ய வசதியாக விற்பனை வண்டி திட்டம் அமல்படுத்தப்பட்டது.

தேசிய நகர் புற வாழ்வாதார இயக்கம் சார்பாக இந்த வண்டி தயாரிப்புக்கான தொகை மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இதற்காக மாநகராட்சிக்கு 1.05 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டது.

அதன் முதல் கட்டமாக, அமைச்சர் முத்துசாமி 40 விற்பனை வண்டிகளை பயனாளிகளுக்கு கடந்த மே மாதம் 30 ஆம் தேதி வழங்கினார். தற்போது மேலும் 83 விற்பனை வண்டிகள் பயனாளிகளுக்கு வழங்குவதற்கு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த வண்டிகளில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், உள்ளிட்டோரின் படம் இடம்பெற்றுள்ளது. அதோடு ஹிந்தியில் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்ததாவது, மத்திய அரசு நிதியில் பயனாளிகளுக்கு வழங்கும் விற்பனை வண்டியில் முன்னாள் மற்றும் இன்னாள் முதலமைச்சர்களின் படம் இடம்பெற்றிருக்கிறது. கருணாநிதி படம் எதனடிப்படையில் இடம்பெற்றுள்ளது?

அரசு நிதியில் வழங்கும் வண்டியை கட்சி வண்டியாக மாற்றி விட்டார்கள். பிரதமர், மத்திய அமைச்சரின் புகைப்படத்தை ஏன் இடம்பெற செய்யவில்லை?

அதேபோல ஹிந்து திணிப்பை விமர்சனம் செய்து தார் பூசி அழிப்போர் இந்த வண்டியில் இருக்கின்ற ஹிந்தி வாசகங்களை கண்டுகொள்ளாதது ஏன்? என கேள்வியெழுப்பியிருக்கிறார்கள்.