இனி குழந்தைகளை ஈசியாக பீட்ரூட் சாப்பிட வைக்கலாம்.. அசத்தல் ரெசிபி!

Photo of author

By Janani

பீட்ரூட்டை உணவில் சேர்த்துகொளவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ஆனால், குழந்தைகளை காய்கறிகளை சாப்பிட வைப்பது தாய்மார்களுக்கு சவாலான விஷயமாக இருக்கிறது.அதனால், அவர்களுக்காக சூப்பர் பீட்ரூட் கட்லெட் செய்து கொடுக்கலாம். குழந்தைகளை கவரும் வகையில் சூப்பர் ரெசிபி உங்களுக்காக..

தேவையானவை :

பெரிய சைஸ் பீட்ரூட் – 1.

பெரிய சைஸ் உருளைக்கிழங்கு – 1.

வேர்க்கடலை – 2 ஸ்பூன்.

மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்.

கரம் மசாலா – 1/4 ஸ்பூன்.

கொத்தமல்லி பொடி – 1/2 ஸ்பூன்.

கொத்தமல்லி – ஒரு கொத்து.

நெய் – 2 ஸ்பூன்.

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

உருளைகிழங்கை வேகவைத்து தனியே எடுத்து கொள்ளவும். பீட்ரூட்டை கழுவி துருவி கொள்ளவும். வறுத்த வேர்கடலையை தோல் நீக்கி அதனை கொரகொரவென அரைத்து தனியே எடுத்து வைத்து கொள்ளவும். அதே மிக்சி ஜாரில் அவித்த உருளைக்கிழங்கு மற்றும் பீட்ரூட் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். இந்த கலவையை அரைத்த வேர்கடலையுடன் சேர்த்து கொள்ளவும்.
இவற்றுடன் மிளகாய் தூள், கரம் மசாலா, கொத்தமல்லி பொடி, உப்பு, நெய் , நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து பிசைந்து கொள்ளவும். கட்லெட் மாவு பதத்திற்கு வந்ததும் அதனை கட்லெட்டுகளாக மாற்றி தட்டி கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கட்லெட்டுகளை பொறித்து எடுத்து கொள்ளவும்.இதனை தக்காளி சாஸூடன் குழந்தைகளுக்கு பரிமாறலாம்.