Chennai high court: விவாகரத்து வழக்கில் இனி தம்பதிகள் நேரில் ஆஜராக நிர்பந்திக்க கூடாது என சென்னை ஐ கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இன்றைய கால கட்டங்களில் திருமணமான தம்பதிகள் மன வேறுபாடு காரணமாக நிறைய பேர் விவாகரத்து கேட்கின்றனர். ஆனால் முந்தைய காலத்தில் “கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்” என்ற நிலை இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை மாறி கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனே விவாகரத்து கேட்கின்றனர்.
அந்த நிலையில் விவாகரத்து வேண்டும் என்றால் குடும்ப நல நீதிமன்றத்திற்கு இருவரும் செல்ல வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் இப்போது சென்னை உயர்நீதிமன்றம் தம்பதியரை நேரில் ஆஜராகும்படி நிர்பந்திக்க கூடாது என குடும்ப நல நீதிமன்றத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதற்கான காரணம் அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தாக்கல் செய்து உள்ளார்கள். ஆனால் அவர்களுக்கு விசா கிடைப்பதில் ஏற்படும் குழப்பத்தால் காணொளி மூலமாக ஆஜராகிறோம் என கூறியும் இந்த வழக்கு மறுக்கப்பட்டது. இதை தொடர்ந்து விவாகரத்து வாக்குமூலம் பதிவு செய்ய குடும்ப நல நீதிமன்றம் மறுத்ததை எதிர்த்து மனைவி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் நேரில் ஆஜராக வேண்டும். விவாகரத்து போன்ற வழக்குகளில் காணொளி மூலம் சம்பந்தப்பட்டவர்களை வர வைத்து விசாரணை மேற்கொண்டு அவர்களுக்கு நீதி வழங்க வேண்டும், என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது