கல்விக் கட்டணம் கேட்டு மிரட்டும் தனியார் பள்ளிகள் மீது மின்னஞ்சலின் மூலம் இனி புகார் அளிக்கலாம்!

Photo of author

By Pavithra

கல்விக் கட்டணம் கேட்டு மிரட்டும் தனியார் பள்ளிகள் மீது மின்னஞ்சலின் மூலம் இனி புகார் அளிக்கலாம்!

கொரோனா பாதிப்பினால் நாடே முடங்கிக் கிடக்கும் நிலையில்,சில தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்பு நடத்த வேண்டும் என்றால் 100% கட்டணம் செலுத்த வேண்டும் என்று பெற்றோர்களை மிரட்டி வருவதாக புகார் எழுந்த வண்ணமே இருக்கின்றது.இது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரணைக்கு எடுத்த உயர்நீதிமன்றம், கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகள் 40% மட்டுமே பள்ளி கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்றும், 100% பள்ளி கட்டணம் அல்லது கூடுதல் கல்வி கட்டணம் கேட்டு மிரட்டும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது.

ஆனாலும் சில பள்ளிகள்,100% கட்டணமும் செலுத்தினால் மட்டுமே தங்களது குழந்தைகளை ஆன்லைன் வகுப்பில் சேர்த்துக் கொள்வோம் என்றும் அப்படி கல்வி கட்டணம் செலுத்தாத பெற்றோர்களின் குழந்தைகளை ஆன்லைன் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது என்றும் மிரட்டல் வந்த வண்ணமே இருக்கின்றன.இதனால் பெற்றோர்களும் மாணவர்களும் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

தனியார் பள்ளிகளின் இந்த அத்துமீறலை,கட்டுப்படுத்தும் நோக்கில் நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசுருதீன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியதாவது நீலகிரி மாவட்ட தனியார் பள்ளிகள் நீதிமன்ற ஆணையை மீறி 100% கல்வி கட்டணம் செலுத்த கோரி கட்டாயப்படுத்தினால் அது தொடர்பான புகாரை நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் மின்னஞ்சளுக்கு புகார் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார்[email protected] மின்னஞ்சல் முகவரிக்கு பெற்றோர்கள் தங்கள் புகாரை தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார்.