திமுகவை விட தவெகவை அதிகம் தாக்கும் நாதக .. தவெகவிற்கும் நாதவிற்கும் தான் போட்டி.. களமிறங்கிய சீமான்!! 

NTK TVK: சட்டமன்றத் தேர்தல் என்றாலே நம் நினைவுக்கு வருவது திமுக, அதிமுக தான். ஆனால் தற்போது அவற்றை மிஞ்சும் அளவிற்கு அசுர வேகத்தை எட்டியுள்ளது தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சி. கட்சி தொடங்கியது முதலே திமுகவிற்கும் தவெகவிற்கும் தான் போட்டி என்று விஜய் கூறி வருகிறார். ஆனால் நாம் தமிழர் கட்சியின் செயலை பார்த்தால் நாதகவிற்கும் தவெகவிற்கும் தான் போட்டி என்பது போல உள்ளது.

நாம்  தமிழர் கட்சி தொடக்கத்திலிருந்தே தனித்து நின்று தான் தேர்தலை எதிர்கொள்கிறது. அதன் பிரதான எதிரி திமுக தான் என்றும் கூறிவருகிறது. ஆனால் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே நாதகவின் செயல்பாடுகள், விமர்சனங்கள் போன்ற அனைத்து நகர்வும் விஜய்யை நோக்கியே உள்ளது. திமுக, அதிமுகவிற்கு பிறகு மூன்றாவது சக்தியாக உருவெடுத்து வரும் நாதகவிற்கு விஜய்யின் வருகை  மிக பெரிய சவாலாக உள்ளது. விஜய் தனது அரசியல் எதிரி திமுக தான் என்று கூறியுள்ளார்.

ஆனால் திமுகவை விட நாதக தான் விஜய் மீது அதிக கவனம் செலுத்துவதாகவும், விஜயின் அடுத்த நகர்வுகளை உற்று நோக்குவதாகவும் தெரிகிறது என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். சமூக ஊடங்ககளில் கூட நாதகவை சேர்ந்தவர்கள் விஜய் மீதான விமர்சனத்தை அதிகம் முன்வைத்து வருகின்றனர்.  ஏற்கனவே விஜய் மீது திமுகவிற்கு பயம் வந்து விட்டதாக சிலர் கூறி வர, நாதகவும் இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவது விஜய்யின் வளர்ச்சியை மேன்மேலும், தீவிரப்படுத்தியுள்ளது.