சீமானின் ஆட்டத்தை இனிமே பார்ப்பீங்க!.. செய்தியாளர் சந்திப்பில் பொங்கிய சீமான்!…

Photo of author

By அசோக்

சீமானின் ஆட்டத்தை இனிமே பார்ப்பீங்க!.. செய்தியாளர் சந்திப்பில் பொங்கிய சீமான்!…

அசோக்

சினிமாவில் இயக்குனர், நடிகர் என வலம் வந்துகொண்டிருந்த சீமான் 15 வருடங்களுக்கு முன்பே நாம் தமிழர் கட்சி என்கிற கட்சியை துவங்கினார். இலங்கையில் விடுதலை புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே போர் நடந்தபோது அந்த போரில் இலங்கை தமிழர்கள் கொத்து கொத்தாய் இறந்து போனார்கள். இதையே அடிப்படையாக வைத்து கட்சியை துவங்கினார் சீமான்.

இலங்கை போர் நடந்த போது பிரபகாரனை சந்தித்து பிரபாகரனை சந்தித்து பேசியதாகவும், அப்போது தனக்கு அவரின் வீட்டில் ஆமைக்கறி சமைத்து போட்டதாகவும் கூறினார். அதோடு, நான் எந்த உணவை விரும்பி சாப்பிடுகிறேன் என ஒருவரை வைத்து குறிப்பெடுக்க வைத்தார் பிரபாகரன் என சீமான் சொன்ன கதையில் தம்பிகள் கூஸ்பம்ஸ் அடைந்தார்கள்.

சீமானின் பேச்சும், செயல்பாடும் பிடிக்காமலேயே கட்சியிலிருந்து பல முக்கிய நிர்வாகிகள் கடந்த சில மாதங்களில் வெளியேறி விஜயின் கட்சிக்கு போய்விட்டார்கள். விஜய் கட்சி துவங்கியவுடன் அவருடன் இணைந்து செயல்படுவது போல காட்டிக்கொண்டார். ஆனால், விஜய் திராவிடத்தை ஏற்பதாக சொன்னதும் கடுப்பாகி அவரை திட்ட துவங்கினார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருப்பதால் அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்குகளை போட துவங்கிவிட்டார்கள். இதில் முதலாவதாக அதிமுக – பாஜக கூட்டணி உருவாகிவிட்டது.

seeman
seeman

திமுகவை தோற்கடிக்க வேண்டும் என ஆசைப்படும் விஜய் அதிமுக கூட்டணியில் இணைவாரா என்பதும் தெரியவில்லை. அதேபோல், வழக்கம்போல் சீமான் யாருடணும் சேராமல் 2026 சட்டமன்ற தேர்தலிலும் தனித்தே போட்டியிடுவார் எனத்தெரிகிறது. பாஜகவிலிருந்து அழைப்பு வந்தும் சீமான் அதை நிராகரித்துவிட்டார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான் ‘சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீர்கள், வரும் தேர்தலில் சீமானின் ஆட்டத்தை பார்ப்பீர்கள். 5வது முறையாக தனித்து போட்டியிடுவோம். நாங்கள் அரசியல் வியாபாரம் செய்ய வந்தவர்கள் இல்லை. கூட்டணி வைத்து வெற்றி பெற்றவர்கள் எல்லாம் என்ன செய்து விட்டார்கள்?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார்.