பன்னீர்செல்வம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர்!

0
137

கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.

அப்போது சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரின் ஆதரவாளர்களுக்கிடையே உண்டான மோதலைத் தொடர்ந்து அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

அதன் பிறகு உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அந்த சியில் அகற்றப்பட்டு சாவி எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடம் வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு பன்னீர்செல்வத்தின் தரப்புக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து 72 நாட்களுக்கு பிறகு அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.

இப்படிப்பட்ட பரபரப்பான சூழ்நிலையில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனை நியமனம் செய்துள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, அதிமுகவின் அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று முதல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கழக உடன்பிறப்புகள் எல்லோரும் அரசியல் ஆலோசகருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Previous articleபள்ளியில்லிருந்து மாணவனை வெளியேற்றிய ஆசிரியர்! சாமிக்கு விரதம் இருந்தது குத்தமா?
Next articleBreaking: நம் கட்சியினர் தான் வளர வேண்டும்..அவர்கள் மட்டும் தான் மணல் அள்ள வேண்டும்!! வைரலாகும் திமுக எம்.பி யின் வீடியோ!