அதிமுகவில் சசிகலாவிற்கு பொதுச்செயலாளர் பதவியா? துணை முதல்வர் போட்ட திடீர் குண்டு!

0
73

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடைய 73 ஆவது பிறந்த பிறந்த நாளை எவ்வாறு கொண்டாடலாம் என்று அம்மா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. அமைச்சர் ஆர். பி உதயகுமார் தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழகத்தின் துணை முதல்வருமான பன்னீர்செல்வம் பங்கு பெற்றார்.

அப்பொழுது அவர் பேசியதாவது, வருடா வருடம் புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாள் விழாவிற்கு ஆரம்பப் புள்ளியாக இருப்பது அம்மா பேரவை தான் ஒருவரும் அசைத்துக் கூடப் பார்க்க முடியாத இயக்கமாக அதிமுகவை ஜெயலலிதாதான் உருவாக்கினார். நம்முடைய கட்சி உருவான 50 வருடங்களில் நம்முடைய கட்சிக்கு 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த மாநிலத்தை ஆளும் உரிமையை தமிழக மக்கள் கொடுத்திருக்கிறார்கள். அந்தப் பெருமை நம்முடைய கட்சிக்கு மட்டுமே இருக்கின்றது இந்த கட்சியில் வெறும் தொண்டனாக இருப்பதே பெருமை தான் என்று தெரிவித்தார்.

அதோடு புரட்சித்தலைவி ஜெயலலிதா, மற்றும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஆகியோர் வழியை பின்பற்றினால் நம் கட்சியை வெல்வதற்கு ஒருவரும் இல்லை இங்கே அனேக அரசியல் கட்சிகள் இருந்தாலும் அந்த கட்சிகளுக்கு எல்லாம் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய பிறந்தநாளை எவ்வாறு கொண்டாடுகிறார்கள் என்று நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனாலும் ஜெயலலிதா பிறந்தநாளில் மட்டுமே ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றோம்.

இந்த விஷயத்தில் நம்மை முன்னோடியாக வைத்துதான் மற்ற கட்சிகள் செயல்படுகின்றன. அதாவது நாம் செய்யும் உதவிகளை பார்த்த பின் தான் அவர்களும் மக்களுக்கு உதவி புரிய முன்வருகிறார்கள். எதிர்வரும் சட்டசபை தேர்தலில் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து உழைத்து வெற்றி அடைவோம். நம்முடைய கட்சியில் இருக்கக்கூடிய ஒருசில அண்ணன் தம்பி பிரச்சனைகள் பேசி தீர்க்கப்படும் என்றும் தெரிவித்த அவர், வெற்றி ஒன்றே நம்முடைய குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். சசிகலா இந்த மாதம் 27ஆம் தேதி தண்டனை காலம் முடிந்து வெளியே வர இருக்கும் நேரத்தில், பன்னீர்செல்வம் இவ்வாறு பேசியிருப்பது சசிகலாவுக்கு கொடுக்கப்பட்ட கிரீன் சிக்னல்? என்ற கேள்வியும் எழுந்திருக்கின்றது .

முன்னரே அதிமுக சார்பாக பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று முதல்வரும், துணை முதல்வரும், பேசி வருவதால் அந்த பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்ற கூற்றின் அடிப்படையில், சசிகலாவிற்கு அதிமுகவில் பொதுச் செயலாளர் போன்ற பதவி வழங்கப்படுமா? என்ற சந்தேகமும் இருந்ததாக சொல்கிறார்கள்.