திமுகவின் கையெழுத்து இயக்கத்திற்கு ஆப்பு வைத்த ஆளும்கட்சி! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

Photo of author

By Sakthi

அதிமுகவை நிராகரிக்கின்றோம் என்ற கையெழுத்து பிரச்சாரத்தை திமுக நடத்தி வருகிறது. அந்தக் கட்சிக்கு தேர்தல் பணிகளை செய்துவரும் பிரசாந்த் கிஷோரின் குழு தான் இந்த பிரச்சாரத்தை வடிவமைத்து கொடுத்ததாக தெரிகிறது.

சமூக வலைதளங்களில் அந்த கட்சியினர் செய்துவரும் இதுபோன்ற பிரச்சாரம் காரணமாக, அதனை முறியடிக்கும் வகையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், ஓ. பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருடைய உத்தரவிற்கு இணங்க. மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவுடன் ஒன்றிணைந்து திமுகவை நிரந்தரமாக நிராகரித்து விட்டோம். என்ற கையெழுத்து இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றது.

தென்காசி வடக்கு மாவட்டம், மற்றும் மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு போன்றவை ஒன்றிணைந்து, திமுகவை நிரந்தரமாக நிராகரித்து விட்டோம் என்ற கையெழுத்து இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது.

திமுகவை நிரந்தரமாக நிராகரித்து விட்டோம். என்ற தலைப்பிலேயே கையெழுத்து இயக்கம் தமிழ்நாட்டில் முதல்முறையாக தென்காசி வடக்கு மாவட்டம், புளியரையில் நடந்தது. இந்த கையெழுத்து இயக்க நிகழ்ச்சியை அதிமுகவின் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி என்ற குட்டியாப்பா ஆரம்பித்து வைத்தார். பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து அதில் கையெழுத்திட்டு தங்களுடைய ஆதரவை அதிமுகவிற்கு அளிப்பதாக தெரிவித்து விட்டுச் சென்றனர்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கழக செயலாளர் குட்டியாப்பா உரையாற்றியபோது, தமிழக மக்களால் பத்து வருடங்களாக புறக்கணிக்கப்பட்ட திமுகவை நிரந்தரமாக நிராகரிக்க முடிவெடுத்து இருக்கிறார்கள் என்பதை, பொதுமக்கள் மிக ஆர்வத்துடன் கையெழுத்திடுவதை பார்த்தாலே தெரியவருகிறது. அனைத்து தரப்பு மக்களும் வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் இந்த ஆட்சியை தொடர்வதற்காக திமுகவை நிரந்தரமாக நிராகரித்து விட்டோம் என்று சபதம் ஏற்போம் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சி தமிழ்நாட்டில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. கழகத்தின் அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத் திட்டம் காரணமாக, அரசுக்கு நற்பெயர் கிடைத்துவிடக் கூடாது என எதிர்க்கட்சி கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகிறது. திமுகவின் இந்த நிலைப்பாட்டிற்கு அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் பதிலடி தந்து வருகிறார்கள் என்று தெரிவித்தார். அதோடு சங்கரன்கோவில், கடையநல்லூர், வாசுதேவநல்லூர், பேரவைத் தொகுதிகளில் ஒவ்வொரு வீடாக சென்று ஐந்து லட்சம் நபர்களிடம் கையெழுத்து பெறப் போகின்றோம் என்று தெரிவித்தார்.