Ilayaraja: கோயில் கருவறைக்குள் இளையராஜா அனுமதிக்க மாட்டோம் என எழுந்த கோஷத்தால் பரபரப்பு.
தமிழக திரையுலகை தனது இசையால் அரை நூற்றாண்டு காலமாக ஆண்டு வருபவர்தான் இசைஞானி இளையராஜா. தமிழ் மொழியை இவரது இசையினால் உலகறிய செய்தவர். இவ்வளவு பெருமைக்குரிய ஒருவர் கோவிலில் தெய்வ வழிபாட்டிற்கு கருவறையில் உள்ளே நுழைய விடாமல் வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இசைஞானி இளையராஜா இவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர்.
சிறு வயதில் இருந்து இசை மீது அதிகம் நாட்டம் கொண்டு இருப்பவர். இசையில் எந்த அளவுக்கு ஆர்வம் கொண்டு இருந்தாரோ அதே அளவிற்கு ஆன்மீகத்தின் மீது பற்று கொண்டவராக இருக்கிறார். இளையராஜா ஒரு சிவன் பக்தர் ஆவார். தனக்கு இசை ஞானம் கிடைக்க இறை அருள் தான் காரணம் என்று நம்பிக்கை கொண்டு இருப்பவர். இந்து சமயத்தின் மீது அதித நம்பிக்கை கொண்டு இருப்பவர்.
இந்த நிலையில் ஒரு சமயம் (கடவுள் மறுப்பாளர்கள்) தி க கட்சியினர் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட இவர் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க அழைத்த போது தான் ஒரு தீவிர கடவுள் நம்பிக்கை கொண்டவன் என கூறி மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனத்திற்கு சென்ற போது கோவில் கருவறை முன்பு உள்ள அர்த்த மண்டபத்தில் இருந்து இசைஞானி இளையராஜா வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.
கோவில் கருவறைக்குள் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே உள்ளே நுழைய வேண்டும் இளையராஜா தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதனால் கருவறைக்குள் வரக்கூடாது என அங்குள்ள ஐயர்கள் கோஷம் எழுப்பி இருக்கிறார்கள். இதனால், அவர் அர்த்த மண்டப படியின் அருகே நின்ற பட சாமி தரிசனம் செய்து கொண்டார்.
தன் கடவுள் நம்பிக்கையினால் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க மறுத்த இளையராஜா தற்போது அந்த கடவுளை வழிபட தீண்டாமை கடைபிடித்து இருப்பதால் வரும் காலங்களில் கடவுள் மறுப்பாளர்கள் ஆதரிப்பாரா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.