ஆபத்தில் இருக்கும் ஒருநாள் கிரிக்கெட்! முன்னாள் பயிற்சியாளர் பேட்டி!!

Photo of author

By Sakthi

ஆபத்தில் இருக்கும் ஒருநாள் கிரிக்கெட்… முன்னாள் பயிற்சியாளர் பேட்டி…

ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆபத்தில் உள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி அவர்கள் கூறியுள்ளார்.

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி என்பது 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டியாகும். தற்போது உலகம் முழுவதும் ஒருநாள் கிரிக்கெட் போட்கள் நடப்பது குறைந்து டி20 போட்டிகள் அதாவது 20 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகள் நடப்பது அதிகமாகின்றது. அதுவும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் தான் அதிகம் நடக்கின்றது.

தற்போது பிக்பேஷ் லீக் என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலிய நாட்டின் உள்ளூர் டி20 தொடர், இந்தியன் பிரிமீயர் லீக் என்று அழைக்கப்படும் இந்திய நாட்டின் உள்ளூர் கிரிக்கெட் தொடர், மேற்கிந்திய தீவுகள் நாட்டில் நடக்கும் கரீபியன் லீக், இங்கிலாந்தில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடர், பாகிஸ்தானில் நடக்கும் பாகிஸ்தான் சூப்பர் லீக், வங்கதேசத்தில் நடக்கும் பங்களதேஷ் பிரீமியர் லீக் போன்று அதிகம் உள்ளூர் டி20 தொடர்கள் நடைபெற தொடங்கிவிட்டது. இதனால் ஒருநாள் கிரிக்கெட் போட்டி அழியும் அபாயம் உள்ளதாக ரவி சாஸ்திரி அவர்கள் அறிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய ரவி சாஸ்திரி அவர்கள், “உலகம் முழுவதும் டி20 போட்டியின் லீக்குகள் அதிகரித்து வருகின்றது. உரிமையாளர்கள் கிரிக்கெட் வீரர்களுடன் ஒப்பந்தம் இடுகின்றனர். இதனால் கிரிக்கெட் போட்டிகள் கால்பந்து போட்டிகளின் திசையில் செல்கின்றது. இதனால் ஒரு நாள் போட்டிகள் நடைபெறும் பொழுது வீரர்கள் பிட்னஸ் காரணமாக விளையாடுவது குறைகின்றது. மேலும் மக்கள் ஒருநாள் கிரிக்கெட்டை விட டி20 லிக்குகளுக்குத் தான் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஆதனால் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆபத்தில் உள்ளது” என்று கூறியுள்ளார்.