இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்! சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் விலகல்!!

Photo of author

By Sakthi

இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்! சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் விலகல்!!

Sakthi

Updated on:

இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்! சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் விலகல்!

இலங்கை அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இருந்து சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் அவர்கள் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக சிறப்பாக பந்து வீசிய ரஷித் கான் அவர்கள் ஆப்கானிஸ்தான் திரும்பினார். இதையடுத்து இலங்கை அணியுடன் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ரஷித் கான் அவர்களின் பெயரும் சேர்க்கப்பட்டது.

நாளை அதாவது ஜூன் இரண்டாம் தேதி முதல் இலங்கை அணியுடன் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடவுள்ளது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி வங்க தேசத்துக்கும் பயணம் செய்யவுள்ளது.

இந்த நிலையில் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் தொடரிலும் ரஷித் கான் அவர்கள் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் இலங்கை அணியுடனான கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடுவார் என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.