ஒருநாள் உலகக் கோப்பை 2023… இந்தியா பாகிஸ்தான் போட்டியின் தேதி மாற்றம்…

0
128

 

ஒருநாள் உலகக் கோப்பை 2023… இந்தியா பாகிஸ்தான் போட்டியின் தேதி மாற்றம்…

 

நடப்பாண்டு ஒருநாள் உலக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியின் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

2023ம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐசிசி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வெளியிட்டது. மொத்தம் 48 போட்டிகள் 46 நாட்களில் நடைபெறும் விதமாக இந்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

 

இந்த உலகக் கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் போட்டி முன்பு 14ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தற்பொழுது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

அதன்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்டோபர் 14ம் தேதியில் இருந்து 15ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அக்டோபர் 15ம் தேதி மாற்றப்பட்ட இந்தியா பாகிஸ்தான் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

அக்டோபர் 14ம் தேதி நடைபெறவிருந்த இந்தியா பாகிஸ்தான் போட்டி மாற்றப்பட்டதற்கு பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக சொல்லப்படுகின்றது. அன்றைய தினம் நவராத்திரி என்பதால் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக இந்த போட்டி அடுத்த தினத்திற்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

 

Previous articleமகளிர் உதவித்தொகை தொடக்க விழா இங்கு தானா?? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
Next articleதென் மாவட்டங்கள் பக்கம் திரும்பும் அரசியல் கட்சிகள்!! மக்களவை தேர்தலில் நடக்கப்போவது என்ன??