முதல்வர் போட்ட அந்த உத்தரவால்! மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்!

Photo of author

By Sakthi

தமிழகம் முழுவதும் இன்று புதன்கிழமை நவம்பர் மாதம் 25ஆம் தேதி நிவர் புயல் எச்சரிக்கை காரணமாக அரசு பொது விடுமுறை அறிவிக்க படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கின்றார்.

சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கின்ற பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்தை திறந்து வைத்த முதலமைச்சர் அதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் கனமழை காரணமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சம்பந்தமாக ஆட்சியாளர்களுக்கு உரிய உத்தரவுகள் இடப்பட்டிருக்கின்றனர் பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருக்கின்றது. பாதிக்கப்படும் மக்களை தங்க வைப்பதற்காக 3346 இடங்களில் நிவாரண முகாம்கள் தயார்நிலையில் இருக்கின்றன. கடலூர், அரியலூர், மாவட்டங்களை சார்ந்த தாழ்வான பகுதிகளில் வசித்து வருவோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். புயல் வரும் நேரத்தில் மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் தேவையில்லாமல் வெளியே எங்கேயும் செல்ல வேண்டாம் 7 மாவட்டங்களில் பேருந்து சேவைகள் தடை செய்யப்பட்டு இருக்கின்றன.

அரசு அலுவலகங்களுக்கு இன்றைய தினம் நவம்பர் மாதம் 25 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுபவர்கள் மட்டும் அலுவலகங்களுக்கு வருவார்கள் புயல் காரணமாக மக்கள் பாதிக்காத அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன என்று தெரிவித்தார் முதல்வர்.