அரியர் ஆல் பாஸ் விவகாரம் குறித்து உயர்கல்வித்துறை அமைச்சரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அரியர் ஆல் பாஸ் விவகாரம் குறித்து உயர்கல்வித்துறை அமைச்சரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

 

தமிழக அரசு இறுதியாண்டு செமஸ்டர் பாடத்தை தவிர்த்து மற்ற அனைத்து பாடங்களில் அரியர் வைத்திருக்கும் மாணவர்கள்,தேர்வு கட்டணம் செலுத்திருந்தால் அனைவரும் ஆல்பாஸ் என்று அண்மையில் அறிவித்திருந்தது.தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.இதனால் மாணவர்கள் தற்போது செய்வதறியாமல் தவித்து வந்த நிலையில் உயர்க் கல்வி துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்கள் அரியர் ஆல் பாஸ் மாணவர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

தமிழக அரசு சட்டப்பேரவை கூட்டமானது நடைபெற்று வரும் நிலையில் இன்று அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது தொடர்பான சட்ட மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.இதில் கலந்து கொண்ட பின்பு பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்கள் அரியர் தேர்வில் ஆல் பாஸ் விவகாரத்தில் மாணவர்கள் பயப்படத்தேவை இல்லை என்றும் ஆரியர் தேர்வு ரத்து செய்வது குறித்து அரசுக்கு எந்தவிதமான தகவலும் கிடைக்க பெறவில்லை என்றும் கூறினார்.இதுமட்டுமின்றி நீதிமன்றத்தின் முடிவை எதிர்கொள்ளவும் தமிழக அரசு தற்போது தயாராக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள இந்த செய்தி அரியர் மாணவர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது.

Leave a Comment