ஓமன் நாட்டில் எண்ணெய் கப்பல் கவிழ்ந்து விபத்து! 13 இந்தியர்கள் உள்பட 16 பேரின் நிலை என்ன? 

Photo of author

By Sakthi

ஓமன் நாட்டில் எண்ணெய் கப்பல் கவிழ்ந்து விபத்து! 13 இந்தியர்கள் உள்பட 16 பேரின் நிலை என்ன?
ஓமன் நாட்டில் எண்ணெய் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 இந்தியர்கள் உள்பட 16 பேர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. இந்த சம்பவம் தற்பொழுது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
ஓமன் நாட்டில் டுகும் என்று அழைக்கப்படும் ஒரு. துறைமுகம் இருக்கின்றது. இந்த டுகும் துறைமுகம் ஒமன் நாட்டிலிருந்து தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இந்த துறைமுகம் தான் ஓமன் நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களின் மையமாக இருக்கின்றது.
இந்த டுகும் துறைமுகத்தில் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொமொரோஸின் கொடியை தாங்கிய பிரஸ்டீஜ் பால்கன் என்ற எண்ணெய் கப்பல் ஓமன் நாட்டில் விபத்துக்குள்ளாகி இருக்கின்றது.
இந்த பிரஸ்டீஜ் பால்கன் எண்ணெய் கப்பல் ஏடன் துறைமுகத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது ஏற்பட்ட எதிர்பாராத திடீர் விபத்தால் பிரஸ்டீஜ் பால்கன் எண்ணெய் கப்பல் கடலினுள் கவிழ்ந்தது.
இந்த கப்பலில் பயணம் செய்த 16 பேரும் கப்பலோடு சேர்ந்து நீரிலுள்ள மூழ்கியுள்ளனர். இந்த 16 பேரில் 13 பேர் இந்திய நாட்டை சேர்ந்தவர்களும் மீதம் 3 பேர் இலங்கையை சேர்ந்தவர்களும் என்று தகவல் கிடைத்துள்ளது.
பிரஸ்டீஜ் பால்கன் எண்ணெய் கப்பல் தாங்கி வந்த எண்ணெய் டேங்கர் ஓமன் நாட்டின் கடற்கரையில் கவிழ்ந்ததாக ஓமன் நாட்டின் கடல் பாதுகாப்பு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி காணாமல் போன 16 பேரை மீட்கும் பணியில் மீட்பு படையினர் செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.
மேலும் இந்த விபத்தில் பிரஸ்டீஜ் பால்கன் எண்ணெய் கப்பலின் டேங்கர் கடலினுள் அப்படியே தலைகீழாக மூழ்கியுள்ளது. இந்நிலையில் விபத்தில் சிக்கிய கப்பல் நிலை பெற்றுள்ளதா அல்லது எண்ணெய் பொருட்கள் கடலினுள் கசிகின்றதா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.
பிரஸ்டீஜ் பால்கன் எண்ணெய் கப்பல் 117 மீட்டர் நீளமுள்ள கப்பலாகும். இந்த கப்பல் எண்ணெய் பொருட்கள் ஏற்றிச் செல்லக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரஸ்டீஜ் பால்கன் எண்ணெய் கப்பல் 2007ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.