சமூக பரவலாக மாறிய புதிய வகை நோய் தொற்று! எங்கு தெரியுமா?

Photo of author

By Sakthi

கொரோனா நோய்த்தொற்றின் உருமாற்றம் அடைந்த ஒமிக்கிரான் என்ற புதிய வகை நோய் தொற்றிய தென்ஆப்பிரிக்காவின் கண்டுபிடிக்கப்பட்டு உலக நாடுகள் முழுவதும் பரவி அதிகமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த புதிய வகை நோய் தொற்றால் மூன்றாம் அலை ஏற்பட்டு அதன் பாதிப்பில் பிப்ரவரி மாதத்தில் உச்சத்தை அடையலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து வருகிறார்கள். இதன் காரணமாக, பல்வேறு நாடுகளும் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளையும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.

இது தொடர்பாக இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருப்பதாவது இங்கிலாந்தில் 336 பேர் இந்த புதிய வகை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த புதிய வகை நோய் தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் பெரும்பாலானவர்கள் சர்வதேச அளவில் பயணம் மேற்கொண்டவர்கள், அவர்கள் இது புதிய வகை நோய் தொற்று சமூக பரவலாக மாறிவிட்டதை காட்டுகிறது என கூறியிருக்கிறார்.

இந்த புதிய வகை நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர்களில் ஒரு சிலருக்கு அறிகுறி இல்லாமல் இருக்கலாம், சிலருக்கு உடல்நிலை சரி இல்லாமல் போகலாம் ஆனால் எனக்கு தெரிந்த வரையில் அவர்களில் யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப் படவில்லை என கூறியிருக்கிறார்.

மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது, இதன் காரணமாக, நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக டிசம்பர் மாதம் 7ம் தேதி அதாவது நேற்று முதல் பிரிட்டன் அரசு புதிய விதிமுறைகளை அமல்படுத்த இருக்கிறது. அதன்படி இந்தியா உட்பட வெளிநாடுகளில் இருந்து வரும் எந்த ஒரு பயணியும் அவர்களின் பயணத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக நோய்த்தொற்று சோதனை செய்திட வேண்டும் என கூறியிருக்கிறார்.

தென்னாப்பிரிக்க மருத்துவ கழக தலைவர் டாக்டர் ஏஞ்சலின் தெரிவித்திருப்பதாவது, இந்த புதிய வகை நோய் தொற்று பாதிப்பு உள்ளவர்களுக்கு லேசான அறிகுறி மட்டுமே இருக்கிறது, இந்த அறிகுறிகள் டெல்டா வைரஸின் அறிகுறிகளில் இருந்து வேறுபட்டு இருக்கின்றன. யாருக்கும் வாசனை சுவை உணரும் திறன் இழப்பு உண்டாகவில்லை, தற்போதைக்கு இதற்கான சிகிச்சைக்காக ஆக்சிஜன் தேவைப்படவில்லை ஆனால் இந்த புதிய வகை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது நிலைமை என்னவாகும் என்பது தெரியவில்லை. இந்த புதிய வகை நோய் தொற்றால் அதிகமாக தசைகள் பாதிக்கிறது குறிப்பாக தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது என தெரிவித்திருக்கிறார்.

இந்த புதிய வகை நோய் தொற்று மாறுபாடு முந்தைய நோய்த்தொற்றுகள் வைரஸ்களை விட மோசமாக இல்லை, இது லேசாக தான் இருக்கிறது அதன் தீவிரத்தை தீர்மானிக்க இன்னும் பல வாரங்கள் ஆகும். இது வேகமாக பரவினாலும் டெல்டாவை விடக் கடுமையானது இல்லை என்பதை நிச்சயம் என்று அமெரிக்க உயர் விஞ்ஞானி அந்தோணி பாசி கூறி இருக்கிறார்.

இந்தியாவில் இதுவரையில், 23 பேர் இந்த புதிய வகை நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட இருக்கின்ற சூழ்நிலையில், தமிழ்நாட்டில் இதுவரையில் யாருக்கும் இந்த புதிய வகை நோய் தொற்று ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.