புதிய வகை நோய் தொற்று! எச்சரிக்கும் உலக விஞ்ஞானிகள்!

Photo of author

By Sakthi

கொரோனா முடிவடைந்துவிட்டது என்று பொதுமக்களும், மத்திய மாநில அரசுகளும், நிம்மதி அடைந்த சமயத்தில் ஒமைக்ரான் என்ற புதிய வகை நோய் தொற்று தென்ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சத்தில் இருந்து வருகின்றன, அதேநேரம் அந்த புதிய வகை நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், இந்த புதிய வகை நோய்த்தொற்று தொடர்பாக உலகநாடுகளின் விஞ்ஞானிகளின் கருத்து இவ்வாறாகத் தான் இருக்கிறது.

அதாவது இந்த புதிய வகை நோய் தொற்று மாறுபாடு டெல்டா வைரஸ் போன்ற கடுமையான பாதிப்பை உண்டாக்கக் கூடும் என்று லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சியாளர்களின் முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

தென்ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதிய வகை நோய் தொற்று பல நாடுகளில் பாதிப்பை உண்டாக்கி வருகிறது. குறிப்பாக இங்கிலாந்து நாட்டில் மட்டும் 10,000 பேர் இந்த புதிய வகை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள், ஒருவர் பலியாகி இருக்கிறார். அனுதினமும் இங்கிலாந்தில் நோய்தொற்று 80000 என்று இருந்து வந்த சூழ்நிலையில் நேற்று ஒரே நாளில் 93 ஆயிரம் பேர் இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த புதிய மாறுபாடு கொண்ட வைரஸ் வேகமாக பரவி வந்தாலும் பாதிப்பு குறைவாகவே இருக்கும், ஆனாலும் சமூக பரவலாக இந்த தோற்று மாறினால் இந்த தொற்றின் பரவல் விகிதம் டெல்டாவை விட அதிகமாகும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து வருகிறார்கள். நோய்த்தொற்று தொடர்பாக உலக சுகாதார அமைப்பு உட்பட பல்வேறு மருத்துவ குழுக்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். ஆனாலும் இதன் பரவல் மற்றும் தீவிரத்தன்மை தொடர்பாக ஆராய்ச்சியாளர்களால் எந்த விதமான முடிவிற்கும் வர இயலவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், லண்டன் இம்பீரியல் கல்லூரியின் பேராசிரியர் நீல் ஃபெர்குசன் தலைமையிலான குழு இந்த புதிய வகை நோய் தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. முதல் கட்ட ஆய்வில் டெல்டாவை விட இந்த புதிய வகை நோய் தொற்று குறைவாகவே பாதிப்பை உண்டாக்கும் என்பதற்கான எந்தவிதமான ஆதாரமும் கிடைக்கவில்லை. எதிர்காலங்களில் வயது வித்தியாசம் இல்லாமல் பரவுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என கூறப்பட்டுள்ளது.

தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்தியவர்களுக்கு ஏன் மூன்றாவதாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கும் ஏன் இந்த புதிய வகை நோய்த்தொற்றுகள் ஏற்படுவது கணிசமாக அதிகரித்திருக்கிறது? இந்த புதிய வகை வைரஸ் தடுப்பூசி வழங்கும் நோய் எதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பித்து விடுகிறது, ஏற்கனவே நோய்தொற்று பரவலால் பாதிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்து வந்தாலும் அதிலிருந்து தப்பித்து விடுகிறது என்பது ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

புதிய வகை நோய் தொற்றால் ஏற்பட்டிருக்கின்ற ஒட்டுமொத்த அச்சுறுத்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இது சுகாதாரத் துறைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது, இதில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.

லண்டன் இம்பீரியல் கல்லூரியின் நோயியல் நிபுணர் ஆய்வு குழு உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் அஸ்ரா காணி தெரிவிக்கும்போது, இந்த புதிய வகை நோய்த்தொற்று முந்தைய விவகாரங்களை விடவும் குறைவான பாதிப்பை ஏற்படுத்துமா என்பது நிச்சயமற்ற செயலாகவே இருக்கிறது.

இதனை முழுமையாகப் புரிந்துகொள்ள பல வாரங்கள் ஆகலாம், ஆனாலும் சாத்தியமான பாதிப்புகளை தணிப்பதற்கு அரசாங்கங்கள் இப்போதே திட்டங்களை செயல்படுத்த வேண்டும், எவ்வாறு இருந்தாலும் பொதுமக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதன் முக்கியத்துவத்தை ஆய்வு முடிவுகள் தெரிவித்திருக்கின்றன எனக்கு கூறி இருக்கிறார்.