புதிய வகை நோய் தொற்று தடுப்பு! தலைமைச் செயலாளர் இன்று முக்கிய ஆலோசனை!

Photo of author

By Sakthi

தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் புதிய வகை நோய் தொற்று பரவல் தொடங்கியவுடன் ஆபத்தான நாடுகள் என்று கண்டறியப்பட்டு இருக்கின்ற இந்த நாடுகளில் இருந்து இந்தியா வருவதற்கு நோய் தொற்று பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டால் புதிய வகை நோய் தொற்றா என்று கண்டறிய மரபணு வரிசைப்படுத்தல் பரிசோதனைக்காக மாதிரிகள் மரபணு பகுப்பாய்வு கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ஆனாலும் இந்தியாவில் கடந்த 2ம் தேதி இந்த புதிய வகை நோய்த்தொற்று ஊடுருவியது தற்போது இதன் எண்ணிக்கை 227 ஆக அதிகரித்திருக்கிறது. கேரள மாநிலத்தில் ஒரே நாளில் 9 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்களில் இதுவரையில் 104 பேருக்கு இந்த புதிய வகை நோய்த்தொற்றின் அறிகுறிகள் ஏற்பட்டு இருக்கிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன்.

இந்த சூழ்நிலையில், இந்த புதிய வகை நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியாளர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று பகல் 12 மணி அளவில் ஆலோசனை நடத்த இருக்கிறார். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளின் போது கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.