இலங்கையிலும் அடி எடுத்து வைத்த ஓமைக்ரான்! உலக மக்கள் பெரும் பீதி!

Photo of author

By Hasini

இலங்கையிலும் அடி எடுத்து வைத்த ஓமைக்ரான்! உலக மக்கள் பெரும் பீதி!

தற்போது தான் கொரோனா பயம் சிறிது குறைந்து உலக மக்கள் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டு இருக்கிறோம். இரண்டு கொரோனா அலைகளை சந்தித்து உள்ளோம். அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி உள்ளோம். திரும்பவும் நமது அன்றாட வேலைகளை செய்ய துவங்கி உள்ளோம்.

ஆனால் அதை எல்லாம் தாண்டி நமது எண்ணத்தை தவிடு பொடி ஆக்கும் வகையில் கொரோனாவின்  அடுத்த ஆட்டம் ஆரம்பம் என்பது போல தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் அதையெல்லாம் தாண்டி புதிதாக வந்துள்ள வைரஸ் நமக்கு திரும்பவும் ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. ஓமைக்ரான் என்ற வைரஸ் தொற்று தற்போது தென் ஆப்பிரிக்காவில் முதலாக முதல் கண்டறியப்பட்டது.

அதன் காரணமாக பல நாடுகளும் விமான பயணங்களில் பல கட்டுப்பாடுகளை செய்தது.  எல்லைகளை மூடியது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து அந்த வைரஸ் கண்டறியப்பட்டாலும் தற்போது பல நாடுகளுக்கும் பரவி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்த செய்தி வெளியாவதற்கு முன்பே பல நாடுகளிலும் இந்த வைரஸ் பரவி இருக்கலாம் என்றும் அறிவியலாளர்கள் சொல்லி உள்ளனர்.

இந்த ஓமைக்ரான் வைரஸ் கொரோனா வைரஸை காட்டிலும் 50 பிறழ்வுகளை கொண்டது என்றும் அறிவியலாளர்கள் அதிர்ச்சி உண்மையை தெரிவித்துள்ளனர். புதிதாக உருவாகியுள்ள இந்த ஓமைக்ரான் வைரஸ் உலக மக்களை மிகவும் அச்சுறுத்தி வருகிறது. அனைத்து நாடுகளிலுமே வெளிநாட்டில் இருந்து வரும் விமான பயணிகளை விமான நிலையத்தில் வைத்தே தீவிரமாக பரிசோதனை செய்கின்றனர்.

மேலும் சில மாறுதல்கள் அவர்களிடம் தெரியும் பட்சத்தில் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அவர்களை தீவிரமாக கண்காணித்தும் வருகின்றனர். இருந்தபோதிலும் மின்னல் வேகத்தில் பல நாடுகளிலும் இந்த புதிய வைரஸ் கால் பதித்துள்ளது. முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் கர்நாடகாவில் உள்ள இரண்டு பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து அமெரிக்காவில் 8 பேருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் கூறுகின்றனர். அதே போல இந்தியாவிலும் ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையிலும் தற்போது தொற்று பரவியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் இருந்து இலங்கை திரும்பிய நபர் ஒருவருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதையடுத்து அவருக்கு மரபணு பரிசோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சொல்லி உள்ளனர். அதன் காரணமாக அந்த தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். மீண்டும் முதலிலிருந்தா? என்று வடிவேலு கேட்பதை போல மீண்டும் தனிமைப்படுத்துதல் கட்டாயம் ஆக்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இப்படியே போனால் நிலைமை எப்படி இருக்கும்? குடும்பத்தை நடத்துவதுவதற்கு என்ன செய்வதென்று பெரும்பாலும் குடும்ப தலைவர்? புலம்ப ஆரம்பித்து விட்டனர்.