இந்த வருடம் அட்சய திருதியை நாளானது நாளை ஏப்ரல் 30-ஆம் தேதி வருகிறது. அட்சய திருதியை என்றாலே அனைவருக்கும் தங்கம் மற்றும் வெள்ளி வாங்க வேண்டும் என்ற எண்ணம் தான் தோன்றும். தங்கம் மற்றும் வெள்ளி வாங்கக்கூடிய சூழ்நிலை இருப்பவர்கள் தங்கத்தை வாங்குவார்கள். தங்கம் வாங்க முடியாதவர்கள் இந்த ஒரு எளிய வழிபாட்டை அட்சய திருதியை அன்று செய்தால் பண பற்றாக்குறை என்பது அவர்களுக்கு இருக்காது. எனவே அடுத்த வருடம் கண்டிப்பாக அவர்களால் தங்கம் அல்லது வெள்ளி வாங்க முடியும்.
தங்கம் மற்றும் வெள்ளி வாங்க இயலாதவர்கள் கல் உப்பு மட்டுமாவது கண்டிப்பாக அட்சய திருதியை நாளன்று வாங்க வேண்டும். அட்சய திருதியை நாள் என்பது தங்கம், வெள்ளி வாங்குவதற்கு உரிய நாள் மட்டும் கிடையாது. அன்றைய நாளில் முடிந்தவர்கள் தங்கத்தை தானம் செய்யலாம், முடியாதவர்கள் அன்னதானம் செய்யலாம். அதாவது அட்சய திருதியை என்பது தானம் செய்யக்கூடிய நாளாகும். அன்றைய நாளில் தானம் வழங்கினால் மட்டுமே பணவரவு என்பது ஏற்படும்.
எனவே அட்சய திருதியை நாள் அன்று உங்களால் முடிந்த அளவிற்கு யாரேனும் ஒருவருக்காவது அன்னதானம் வழங்குங்கள். இதனால் கோடி புண்ணியம் உங்களுக்கு உண்டாகும். அட்சய திருதியை அன்று அதிகாலை குளித்துவிட்டு காலை 4 மணி முதல் மதியம் 2 மணி வரை உங்களால் எப்பொழுது முடியுமோ அப்பொழுது பூஜை செய்து கொள்ளலாம்.
சுவாமி படங்களை சுத்தம் செய்து பூக்களை போட்டு அலங்கரித்த பின்னர், உங்களால் முடிந்த நெய்வேத்தியம் செய்து படிக்க வேண்டும். இந்த மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக ஒரு சிறிய உப்பு ஜாடியில் சிறிதளவு கல் உப்பை நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மஞ்சள் நிற துணியில் சிறிதளவு வெந்தயம், ஒரு 5 ரூபாய் நாணயம், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றை வைத்து முடிந்து அதன் மேல் மஞ்சள் குங்குமத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.
தங்கம் மற்றும் வெள்ளியை வைக்க முடிந்தவர்கள் வைக்கலாம். முடியாதவர்கள் வெந்தயம் மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களை மட்டும் வைத்துக் கொள்ளலாம். இப்பொழுது இதனை உப்பு ஜாடியில் வைக்க வேண்டும். வைக்கும் பொழுது “மகாலட்சுமியே வருக ஐஸ்வர்யம் தருக” என்று கூறிக் கொண்டு வைக்க வேண்டும்.
புதன் பகவானுக்கு உகந்த தானியம் என்றால் பச்சபயிறு மற்றும் வெந்தயம். அதே போன்று புதன் பகவானுக்கும் குபேரருக்கும் உகந்த எண் 5. எனவேதான் வெந்தயமும், ஐந்து ரூபாய் நாணயமும் இதனுள் வைக்கிறோம். இந்த உப்பு ஜாடியை ஒரு சிறிய தட்டில் சில்லறை காசுகளை பரப்பி அதன் மேல் தான் வைக்க வேண்டும். இவ்வாறு உப்பு ஜாடியை வைத்து கற்பூர ஆரத்தி காண்பித்து, மகாலட்சுமி தாயை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.
இந்த எளிய வழிபாட்டை அட்சய திருதியை நாளன்று செய்வதன் மூலம் பணவரவு அதிகரிக்கும். இந்த வருடம் தங்கம் வாங்க முடியாதவர்கள் கண்டிப்பாக அடுத்த வருடம் தங்கம் வாங்கக்கூடிய நிலைக்கு உயர்வீர்கள். எனவே அட்சய திருதியை அன்று இந்த ஒரு எளிய வழிபாட்டை செய்து பலன் அடையுங்கள்.