ஒரு கோடிப்பு ஒரு கோடி… சாம்சாங் நிறுவனம் அறிமுகப்படுத்திய புது டிவி!!

0
132

 

ஒரு கோடிப்பு ஒரு கோடி… சாம்சாங் நிறுவனம் அறிமுகப்படுத்திய புது டிவி…

 

மொபைல், தொலைக்காட்சி போன்ற மின்னணு சாதனங்களின் நிற்பனையில் முன்னிலையில் உள்ள சாம்சங் நிறுவனம் 1.15 கோடி ரூபாய் விலை கொண்ட புதிய தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

 

 

மொபைல், வாஷிங் மிஷின், லேப்டாப், ஃபிரிட்ஜ், டிவி போன்ற வீட்டுக்குத் தேவையான அனைத்து விதமான சாதனங்களையும் சாம்சங்க் நிறுவனம் விற்பனை செய்து வருகின்றது. இந்நிலையில் சாம்சங்க் நிறுவனம் 1.15 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய டிவி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

 

 

 

சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த அல்ட்ரா பிரீமியம் லக்சரி மைக்ரோ எல்இடி டிவி 110 இன்ச் அளவு டிஸ்பிளேவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய மைக்ரோ எல்.இ.டி தொலைக்காட்சி வண்ணங்கள், ஒளி ஆகியவற்றை மிக நேர்த்தியாக வழங்குவதால் இந்த டிவியை பார்க்கும் பொழுது சிறந்த அனுபவம் கிடைக்கும்.

 

 

 

 

சாம்சங் நிறுவனம் மிகச் சிறந்த பொருள்களை வைத்து இந்த புதிய டிவியை தயார் செய்துள்ளது. மற்ற தொலைக்காட்சிகளில் நாட்கள் செல்ல செல்ல ஒளித்திறன் மங்கிவிடும். அதுப் போல இந்த புதிய டிவியில் ஒளித்திறன் மங்காமல் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

 

 

 

110 இன்ச் அளவு உடைய இந்த டிவியில் படங்கள் பார்க்கும் பொழுது திரையரங்கில் பார்ப்பது போல அனுபவம் கிடைக்குமாம். 24 லட்சம் மைக்ரோ மீட்டர் அளவு உள்ள சிறிய எல்.இ.டிகள் இந்த தொலைக்காட்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. உலகத்தில் மிகவும் கடினமான உலோகம் என்று அழைக்கப்படும் சஃபைர் என்ற உலோகத்தை வைத்து இந்த தொலைக்காட்சியை தொழில்நுட்ப வல்லுநர்கள் தயாரித்து உள்ளனர்.

 

 

 

 

ஆம்பியண்ட் டிஸ்பிளே மோட் என்ற பிரிவில் வைத்தால் சுவற்றில் ஒரு டிஸ்பிளே இருப்பது போல தொலைக்காட்சி தெரியுமாம். இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட இந்த டிவியின் மேலும் ஒரு சிறப்பு என்ன என்றால் இந்த தொலைக்காட்சியின் விலைதான் மற்றுமொரு சிறப்பாகும். சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய டிவியின் விலை இந்திய மதிப்பில் 1,15,00,000 ரூபாய் அதாவது ஒரு கோடியே பதினைந்து லட்சம் ரூபாய் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஒரு கோடி ரூபாய்க்கு சாம்சங் நிறுவனம் டிவியை அறிமுகம் செய்தது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Previous article5 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம்!! தமிழக அரசு அதிரடி!!
Next articleஇந்த முறை உலகக் கோப்பையை வெல்வதற்கு அதிக ஆதரவு இருக்கு… இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி!!