ஒரு நாள் மட்டுமே பிரச்சாரம்!! சொந்த தொகுதியில் அமோக வெற்றி பெற்ற DK!!

Photo of author

By Sakthi

ஒரு நாள் மட்டுமே பிரச்சாரம்!! சொந்த தொகுதியில் அமோக வெற்றி பெற்ற DK!!

Sakthi

One Day Only Campaign!! DK won by a landslide in his own constituency!!
ஒரு நாள் மட்டுமே பிரச்சாரம்!! சொந்த தொகுதியில் அமோக வெற்றி பெற்ற DK!!
தனது தொகுதியில் ஒரே ஒரு நாள் மட்டும் பிரச்சாரம் செய்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் கர்நாடக சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
கர்நாடக மாநிலத்துக்கான சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக கடந்த மே 10ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் கர்நாடக மாநிலத்தின் ஆட்சியை பிடிக்க பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இதையடுத்து இன்று வாக்கு எண்ணிக்கைகள் நடந்து கொண்டிருக்கின்றது. ஒரு சில தொகுதிகளின் முடிவுகள் மட்டுமே வெளியாக வேண்டும்.
இதில் காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் அவர்கள் தான் நின்ற தொகுதியில் ஒரு நாள் மட்டுமே பிரச்சாரம் செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக கர்நாடகா மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டார். இதனிடையே தான் நிற்கும் கனகபுரா தொகுதியில் ஒரே ஒரு நாள் மட்டும் பிரச்சாரம் செய்து அதிக வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் அவர்கள் கனகபுரா தொகுதியில் மொத்தம் 1,15,067 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அசோகா 16,521 வாக்குகள் மட்டுமே பெற்றார். மஜத வேட்பாளர் நாகராஜூ அவர்கள் 17,649 வாக்குகள் பெற்றார். தான் நின்ற கனகபுரா தொகுதியில் ஒரு நாள் மட்டுமே பிரச்சாரம் செய்து அமோக வெற்றி பெற்று காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் சாதனை படைத்துள்ளார்.