சேலத்தில் இருந்த மரங்களை வெட்டிவிட்டு ஒரு இலட்சம் மரம்! அமைச்சர் சொன்ன செய்தி!
அனைத்து மாவட்டங்களிலும், ஊர்களிலுமே, நகரமயமாக்கல் கொள்கையின் மூலம் இருக்கும் இடங்களை எல்லாம் சீர் செய்து, செடி கொடிகளை எல்லாம் அழித்துவிட்டு எல்லா இடத்திலும் ஒரு கட்டுமானங்களை கட்டி விடுகின்றனர். அது வயல் வெளியாக இருந்தாலும் கூட, அது பொய்க்காத பூமி என்று கூறி அதை விற்று விடுகின்றனர். விவசாய நிலங்களையும், பட்டா போட்டு விற்று விடுகின்றனர். இந்த பெருமை அனைத்தும் அரசியல் கட்சி ஒரு காரணம் என்றாலும், ரியல் எஸ்டேட் அதிபர்களையே பெரும் பங்கு சாரும்.
ஒரு பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்பு சேலத்தில் சாரதா கல்லூரி பகுதிகளில் பேருந்துகளில் செல்லும் போதே ஒரு மலையின் நடுவே செல்வது போன்று அவ்வளவு ரம்மியமாக இருக்கும். பல இடங்கள் அப்படி இருந்தாலும், சாலை அகலப்படுத்தும் பணி என்று எல்லா மரங்களையும் வெட்டி வீழ்த்தி விட்டனர். நாகரீகம் வளர்க்கிறோம் என்ற பெயரில் அனைத்து மரங்களையும் வெட்டி சாய்த்து விடுகின்றனர்.
மேலும் பொதுமக்களும் நிலமதிப்பு அதிகரித்ததன் காரணமாக புதராக இருக்கும் பகுதிகளை எல்லாம் சீர்செய்து கட்டிடங்களையும், வணிக வளாகங்களையும் எழுப்பி, வாடகைக்கு விட்டு விடுகின்றனர். ஒரு இரண்டு வருடங்கள் நாம் எங்குமே செல்லாமல் ஊர் சுற்றினால், வெளியில் வரும் போது பல இடங்கள், அந்த இடமா? இந்த இடம் என்று அதிசயத்தக்க வகையில் அனைத்து இடங்களும் மாறிக்கொண்டே வருகின்றன.
இந்நிலையில் இருக்கும் வளங்களை எல்லாம் அழித்துவிட்டு, நாம் என்ன செய்யப் போகிறோம். எதிர்காலத்தில் நம் பிள்ளைகளுக்கு என்ன தரப் போகிறோம். இயற்கையான காற்று கூட இல்லாத பட்சத்தில் என பல கேள்விகள் நம்முள் இருந்தாலும் காலப்போக்கில் நாம் யாரும் இதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
இந்நிலையில் சேலம் அருகே வாய்க்கால் பட்டறையில் நகருக்குள் வனம் என்ற திட்டத்தை அமைச்சர் கே.என். நேரு இன்று தொடங்கி வைத்துள்ளார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார். சேலம் மாவட்டத்தில் நகருக்குள் வனம் என்ற திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாநகராட்சி நகராட்சி பகுதிகளில் பாசன மற்றும் ஏரிகளை தூர்வாரப்படும் என்றும் கூறினார்.
மேலும் ஏரிகளை தூர்வாரி அதன் மூலம் பாசன பகுதிகளுக்கு மழை நீரை கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், இது குறித்து பல திட்டங்கள் தீர்மானித்துள்ளோம் என்றும் கூறினார்.