தவெகவில் மேலும் ஒரு அதிமுக அமைச்சர்.. பட்டையை கிளப்பும் KAS!! துள்ளிக்குதித்த விஜய்!

ADMK TVK: அடுத்த வருடம் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக கூட்டணி கணக்குகள், தொகுதி பங்கீடு போன்றவற்றை நடத்தி வரும் நிலையில், அதனை முயற்சியை சிதைக்கும் வகையில் பிரிவினைகள் அரங்கேறி வருகின்றன. இதற்கெல்லாம் காரணம் இபிஎஸ்யின் தலைமை வெறி என்று அதிமுக நிர்வாகிகளே கூறியுள்ளனர். இவ்வாறு இருக்க இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் கோலாகலமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் பிரிந்தவர்கள் மீண்டும் சேர்க்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கூட்டத்தில் பிரிந்தவர்களை சேர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்படவில்லை என்றால் வேறு மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஓபிஎஸ் கூறியிருந்தார்.

ஆனால் தற்சமயம் ஓபிஎஸ்யின் ஆதவாளர்கள் பலரும் கட்சி மாறி இணைந்து வருவது, அவரை தனித்து விடுவதாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இவர் எப்படி வேறு முடிவுகளை எடுப்பார் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்த இக்கட்டான சூழலில், ஓபிஎஸ்யின் தீவிர ஆதரவாளராக இருந்த வைத்தியலிங்கம் கூடிய விரைவில் தவெகவில் இணைய இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே ஓபிஎஸ் மீது அதிருப்தியில் இருப்பதாக  கூறப்பட்ட நிலையில், திமுக, அதிமுக என இருபக்கமும் இவரை கட்சியில் சேர்க்க போராடி வந்தன.

ஆனால் இந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தது. இவ்வாறான நிலையில் தான் அண்மையில் தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை தவெகவில் சேர்ப்பேன் என கூறி, அதற்கான வேலைப்பாடுகளை செய்து வருகிறார். இதற்காக வைத்தியலிங்கத்திடம் செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இபிஎஸ் அதிமுகவை ஒருங்கிணைப்பதாக தெரியவில்லை என்ற காரணத்தினாலும், ஓபிஎஸ் பாஜகவில் சேரப்போகிறார் என்ற கருத்து பரவியதாலும், நம்முடைய மவுசு குறைந்து விட்டது என்பதை உணர்ந்த வைத்தியலிங்கம் தவெகவில் சேர்வதற்கான சாத்திய கூறுகள் அதிகளவில் உள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.