DMK SMK: 2021 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்ததை போல இந்த முறையும் நடக்க வேண்டுமென ஏகப்பட்ட முயற்சிகளை கையில் எடுத்து வரும் திமுக பல்வேறு சிக்கல்களையும் சந்தித்துள்ளது. அதில் முதலாவது விஜய்யின் வருகை. இவர் திமுகவை அரசியல் எதிரி என்று கூறி, திமுக எதிர்ப்பு வாக்குகளையும், இளைஞர்களின் வாக்கு, பெண்களின் வாக்கு போன்ற எல்லாவற்றையும் அறுவடை செய்ய காத்திருக்கிறார். இதுவே திமுகவிற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் பட்சத்தில், அதன் கூட்டணி கட்சிகளும் ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் போன்ற கோரிக்கையை முன் வைத்து வருகின்றன.
மேலும் திமுக அமைச்சர்கள் மீதுள்ள ஊழல் புகாரால் மக்கள் அதிருப்தியில் உள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறான நிலையில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர், எர்ணாவூர் நாராயணன், இந்த சட்டமன்ற தேர்தலில் வைகுண்டம் தொகுதியில் போட்டியிடுவதாக தன்னிச்சையாக அறிவித்துள்ளார். தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை திமுக இன்னும் தீவிரப்படுத்தாத நிலையில், இவர் தொகுதியை அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த செய்தி திமுக தலைமைக்கு பேரிடியை இறங்கியுள்ளது என்று திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. தற்போது திமுகவிற்கு அதிமுக, தவெக, பாஜக போன்ற கட்சிகள் ஸ்டாலினுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வரும் வேளையில் இவரின் இந்த கருத்து அதனை மேலும் வலுப்பெற செய்துள்ளது. இதன் காரணமாக திமுகவின் உள்ளகத்தில் கடும் அதிருப்தி நிலவி வருவதாகவும், சமத்துவ மக்கள் கட்சி கடும் கண்டனத்திற்கு ஆளானதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.